ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் மனைவி, எம்.பி.,க்கள் பதவி ஏற்பு விழாவின் போது, கவர்ச்சி உடையில் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேல் நாட்டில், கடந்த மாதம், பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், பிரதமர் நேதன்யாகு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பார்லிமென்ட்டின், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா, 5ம்தேதி நடந்தது. பார்லிமென்ட் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு, பிரதமர் நேதன்யாகுவின் மனைவி சாரா,54, வந்திருந்தார். மெல்லிய, சல்லடை துணி போன்று, உள்ளாடைகள் தெரியும் அளவுக்கு அவர் உடுத்தியிருந்த ஆடையை, அந்நாட்டு பத்திரிகைகள் விமர்சனம் செய்துள்ளன. "அமெரிக்க நடிகையும், பாப் பாடகியுமான பியான்ஸ் போன்று, சாரா உடை உடுத்தி வந்தது, அவருடைய மட்டமான ரசனையையை காட்டுகிறது. இந்த வயதில் அவர், இதுபோன்று உடை அணிவது சகிக்க முடியவில்லை' என, பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன. நேதன்யாகுவின், லிகுட் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி., லிவ்நாட், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். லிவ்நட் குறிப்பிடுகையில், ""இஸ்ரேல் பார்லிமென்ட்டில், ஆண்களை விட பெண் உறுப்பினர்கள் தான் சாமர்த்தியசாலிகளாக உள்ளனர். சாராவின் உடையை விமர்சிப்பது, ஆணாதிக்க மனோபாவத்தை தான் காட்டுகிறது. பிரதமர் மனைவி என்பதால், அவரது ஆடை விவகாரத்தை, அரசியலாக்கக்கூடாது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.