பீஜிங்
: சீனாவில், ஒரு குழந்தை திட்டத்தை செயல்படுத்துவதில் கண்டிப்பு காட்டிய
அதிகாரிகளால், 13 மாத குழந்தை, வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம்,
அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில், மக்கள் தொகையை
கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 1979ல் "ஒரு குழந்தை திட்டம்',
அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நகர்ப்பறங்களில் இருக்கும் தம்பதிகள்,
ஒரு குழந்தை தான் பெற்றுக்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ளவர்கள்,
முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், இரண்டாவது குழந்தை
பெற்றுக்கொள்ள, அனுமதி உண்டு. ஒரு குழந்தைக்கு மேல்
பெற்றுக்கொள்பவர்களுக்கு, அபராதமும், சிறை தண்டனையும்
விதிக்கப்படுகிறது.இந்நிலையில், கடந்த 4ம் தேதி,ஷிஜியாங் பகுதி
தம்பதியினரிடம், மூன்றாவது குழந்தை பெற்றதற்காக, அபராத தொகை கேட்டு, சீன
மக்கள் தொகை கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கெடுபிடி செய்தனர். அப்போது
ஏற்பட்ட, தகராறில், பெற்றோர் கையில் இருந்து தவறி விழுந்த, 13 மாத ஆண்
குழந்தை மீது, அதிகாரிகள் வந்த வாகனம் ஏறியது. இதில் குழந்தை இறந்தது. இந்த
சம்பவம், சீன மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.