டெஹ்ரான் : ""அமெரிக்காவுடன், அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, ஈரான் தயாராக இல்லை,'' என, அந்நாட்டின் தலைவர் அயதுல்லா அலி காமேனி, தெரிவித்துள்ளார். ஈரான், அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா, குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென், "அணு ஆயுதம் தொடர்பான பிரச்னையை தீர்க்க, ஈரான் பேச்சு வார்த்தைக்கு முன் வரவேண்டும்' என, தெரிவித்திருந்தார்.இது குறித்து, ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறியதாவது:மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்காவின் திட்டங்கள் தோல்வி அடைந்து விட்டன. எனவே, எப்படியாவது வெற்றி பெறும் நோக்கில், அந்நாடு, ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஒருபுறம் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு, மறுபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு ஈரான் அடிபணியாது.நான் அரசியல் தூதன் அல்ல, புரட்சியாளன்.ஈரான் மீது பொருளாதார தடை நீடிக்கும் வரை, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது. இதுபோன்ற பேச்சுவார்த்தைகளால் எந்த பலனும் ஏற்படாது.இவ்வாறு அயதுல்லா அலி காமேனி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.