வாஷிங்டன்
: அமெரிக்காவின் அறிவியல் துறையில், உயர் பதவியில் இருந்த, இந்திய டாக்டர்
சுப்ரா சுரேஷ், அப்பதவியில் இருந்து விலகி, புகழ்பெற்ற கார்னீகி மெலான்
பல்கலைக்கழகத்தின் தலைவராகிறார்.
அமெரிக்காவின், "நேஷனல் சயின்ஸ்
பவுண்டேஷனின்' தலைவராக இருந்தவர், சுப்ரா சுரேஷ், 56. இவர், சென்னை,
ஐ.ஐ.டி., யில் பி.டெக்., முடித்தவர். பின், அமெரிக்காவின், மாசாசூசெட்ஸ்
ல்கலைக்கழகத்தில், "டாக்டர்' பட்டம் பெற்றார்.இவரது சேவையை கவுரவிக்கும்
விதமாக, இந்திய அரசு, 2011ல், பத்மஸ்ரீ விருது அளித்தது. தற்போது,
என்.எஸ்.எப்., இயக்குனர் பதவியில் இருந்து, பதவி விலகும் அவருக்கு, அதிபர்
ஒபாமா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.பெல்சில்வேனியா மாகாணத்தில் உள்ள,
கார்னீகி மெலான் பல்கலைக்கழகத்தின் தலைவராக, வரும் ஜூலை மாதம்
பதவியேற்கவுள்ள, சுப்ரா சுரேஷ், அறிவியல் தொடர்பான, மூன்று
புத்தகங்களையும், ஏராளமான ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.