பாரிஸ்
: "சொந்த மகளை கற்பழித்த, தூதரக அதிகாரிக்கு, மற்ற அதிகாரிகள் ஆதரவாக
செயல்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, குழந்தையின் இந்திய
தாய், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்திடம் கோரியுள்ளார்.பெங்களூருவில்,
பிரான்சு தூதரக அதிகாரியாக பணிபுரிந்தவர், பாஸ்கல் மசுரியர். இவரது மனைவி,
இந்தியாவை சேர்ந்த, சுஜா ஜோன்ஸ். தனது மூன்று வயது பெண்ணை, பாஸ்கல்
மசுரியர், கற்பழித்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில்,
கடந்த ஆண்டு, பாஸ்கல் கைது செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு ஜாமின் அளித்த
கோர்ட், அவரது, பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது.
இந்நிலையில்,
பாதிக்கப்பட்ட குழந்தையை பற்றி கவலைப்படாமல், பாஸ்கல் மசுரியருக்கு ஆதரவாக
பிரெஞ்சு தூதரக அதிகாரிகள், செயல்படுவதாக, சுஜா ஜோன்சின் வழக்கறிஞர்கள்,
அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர், லாரன்ட் பேபியசிடம் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பாஸ்கல் மசுரியர், பிரெஞ்சு தூதரக அதிகாரி ஒருவரின் வங்கி
கணக்கில், 2.5 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள
வழக்கறிஞர்கள், "அந்த பணம் எதற்காக செலவிடப்பட்டது, என்பதை தெரிவிக்க
வேண்டும்' என, கோரியுள்ளனர். பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட், அடுத்த
வாரம், இந்திய பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி, சுஜா ஜோன்ஸ் இந்த
கேள்வியை எழுப்பியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.