நியூயார்க் : அமெரிக்காவின், "எம்பயர் ஸ்டேட்' கட்டிடத்தின், படிகளில் ஏறி, ஓட்டப்பந்தய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.அமெரிக்காவின் உயரமான கட்டடங்களில் ஒன்று, எம்பயர் ஸ்டேட் கட்டிடம். நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 86 அடுக்குகள் கொண்ட, இக்கட்டிடத்தில், மொத்தம், 1,576 படிகள் உள்ளன. இந்த கட்டடத்தின் படிகளில் ஏறி ஓடும் போட்டி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, நடந்த போட்டிகளில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட, ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.கூட்ட நெரிசலை தவிர்க்க, முதலில் பிரபலமான வீரர்கள் ஏறிய பின், கட்டடத்தின் படிகளில் ஓட, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.