வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை, பலப்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின், புதிய வெளியுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஜான் கெர்ரி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உலகத் தலைவர்களிடம் பேசி வருகிறார். ஐ.நா., பொது செயலர், பான் கி-மூன், நேட்டோ பொது செயலர் உள்ளிட்டோரிடம் தொலைபேசியில் பேசிய அவர், இந்திய வெளியுறவு துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்திடம் தொடர்பு கொண்டு பேசினார்.இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், விக்டோரியா நுலாண்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து நுலாண்ட் கூறியதாவது: அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும், இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. "உலகளாவிய பிரச்னைகளில், இரு நாடுகளும் இணைந்து செயலாற்றும்' என, சல்மான் குர்ஷித்திடம், ஜான் கெர்ரி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்துவதில், இரு அமைச்சர்களும் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா தொடர்ந்து அளித்து வரும் உதவிகளுக்காக, ஜான் கெர்ரி நன்றி தெரிவித்தார். இவ்வாறு, விக்டோரியா நுலாண்ட் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.