லண்டன் : நியூசிலாந்து நாட்டில், சுற்றுலா பயணியின் பணத்தை, ஒரு கிளி திருடியுள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் பீட்டர் லீச். சமீபத்தில், நியூசிலாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். இயற்கை எழில் வாய்ந்த, டேட் ஹைவே என்ற இடத்தில், அவர் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு, இயற்கை காட்சிகளை படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, கிளி இனத்தைச் சேர்ந்த, "கீ' என்ற பறவை ஒன்று, திறந்திருந்த வாகனத்தின், ஜன்னல் வழியே நுழைந்து, அவரது துணிப் பையை, தூக்கிக் கொண்டு பறந்து விட்டது. துணிப் பைக்குள், அவர் 50 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். வண்டிக்குள் இருந்து, எதையோ தூக்கிக் கொண்டு கிளி பறப்பதாக, அருகில் இருந்தவர்கள் சொன்னதும் ஓடிப் போய் பார்த்திருக்கிறார், பீட்டர் லீச். அதற்குள் பறவை பறந்து விட்டது. "இது பற்றி, போலீசில் புகார் தெரிவிக்கப்போன போது, முதலில் அவர்கள் அதை நம்பவேயில்லை' என்று பரிதாபமாக கூறுகிறார் பீட்டர் லீச்.கிளி வகைகளில் பெரிய உருவம் கொண்ட கீ கிளிகள், புத்திசாலித் தனமானவை. அத்துடன், மனிதர்களுக்கு தொல்லை கொடுப்பதிலும் பெயர் பெற்றவை. குப்பை, பைகளை திறந்து நோண்டுவது, வாகனங்களை சேதப்படுத்துவது என்று பல்வேறு வகையில் விஷமம் செய்யும் இவற்றை உள்ளூர்வாசிகள் வெறுத்தாலும், சுற்றுலா பயணிகளை இவ்வகை பறவைகள் கவர்கின்றன.கடந்த 2009ல், ஸ்காட்லாந்து பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை, இந்த இன பறவை ஒன்று திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.