புதுடில்லி : ரயில் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுமா என்பதற்கு, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் பதில் அளித்தார்.தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக, பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்ததால், ரயில்வே துறைக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. அதனால், கடந்த டிசம்பர், 22ல், ரயில் கட்டணம், 21 சதவீதம் உயர்த்தப்பட்டது. சமீபத்தில், டீசல் விலை அதிகரிக்கப்பட்டதால், ரயில்வேக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை சமாளிக்க, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படலாம் என்ற வதந்திகள் உலா வருகின்றன.
இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் நேற்று கூறியதாவது: கடந்த மாதம், ரயில் கட்டணத்தை உயர்த்திய பின், ரயில்வேக்கு, 6,600 கோடி வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்த்தோம். ஆனால், டீசல் விலை லிட்டருக்கு, 10.80 ரூபாய் உயர்த்தப்பட்டதால், ரயில்வே துறைக்கு, ஆண்டு ஒன்றுக்கு, 3,300 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். அத்துடன், புதிய ரயில்பாதை அமைத்தல், ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்தல் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கும், நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. ரயில் கட்டணம் உயர்த்தப்படுமா என்பதற்கு, ரயில்வே பட்ஜெட் தாக்கலின் போது, பதில் கிடைக்கும்; அதுவரை பொறுத்திருங்கள். இவ்வாறு பவன்குமார் பன்சால் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.