கடலூர்:கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கேரி பேக்குகள் ஒழிக்கப்படும் என கலெக்டர் கிர்லோஷ்குமார் கூறினார்.
இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
"தானே' புயலில் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், 90 ஆயிரம் "கான்கிரீட்' வீடுகள் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது.முதல் கட்டமாக அதிகமாக பாதிக்கப்பட்ட கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், மேல்புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.குடிசை வீடு, பட்டா வைத்திருப்பவர்கள் இந்த வீடுகளை பெற தகுதியானவர்கள்.
ஒவ்வொரு வீடும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 200 சதுர அடியில் கட்டப்படும்.
இதில் வசிக்கும் அறை, சமையலறை, கழிவறை, மழை நீர் சேகரிப்புடன் அமையும்.வீடுகளை பயனாளிகளே கட்டிக்கொள்ள வேண்டும். இதற்காக சிமென்ட் ஒரு மூட்டை 220 அளவில் 60 மூட்டையும், அதற்குரிய இரும்பும் குறைந்த விலையில் வழங்கப்படும்.
வீடு கட்டத் தேவையான மணல் கொண்டுவர குவாரிகளில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
அண்டை மாவட்டத்தில் கிடைக்கக் கூடிய ஜல்லியை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பொருட்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கும்போது விலை குறையும் என்பதால் 10 நபர்கள் கொண்ட பயனாளிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வீடுகள் கட்டப்படுவதை மாவட்டம் முழுவதும் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செயற்பொறியாளர், உதவி திட்ட அலுவலர், 8 உதவி செயற்பொறியாளர்கள், 13 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 22 உதவி பொறியாளர்கள், 180 தொழில் நுட்ப உதவியாளர்கள், ஒரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்கு) இளநிலை வரைவு தொழில் அலுவலர், 15 கணினி இயக்குனர்கள், அலுவலக உதவியா ளர் ஆகிய பணியிடங்கள் இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடுகள் முழுவதும் வரும் டிசம்பரில் நிறைவடையும்.
பிளாஸ்டிக் ஒழிப்பு
மாவட்டத்தில் ஏற்கனவே பிளாஸ்டிக் ஒழிப்புக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி மாவட்ட கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே அபராதம் விதிக்கலாம்.
முதலில் கேரி பேக்குகள் தடை செய்யப்படும். 41 மைக்ரான் உள்ள கேரி பேக்குகளை அனுமதிக்குமாறு வர்த்தக சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
ஆனால் பிளாஸ்டிக்கே முழுவதுமாக ஒழிக்கும்போது எத்தனை மைக்ரான் இருந்தால் என்ன இருக்கிறது.இவ்வாறு கலெக்டர் கிர்லோஷ்குமார் கூறினார்.
பி.ஆர். ஓ., தமிழ்ச்செல்வராஜன் உடனிருந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.