புதுடில்லி
: மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சட்டசபை காங்., தலைவர்களுடன்,
கட்சியின் துணைத் தலைவர் ராகுல், வரும், 15ம் தேதி, டில்லியில் ஆலோசனை
நடத்துகிறார்.இதுதொடர்பாக, காங்கிரஸ் பொது செயலர் ஜனார்த்தன் திவேதி
கூறியதாவது:காங்., துணைத் தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அகில
இந்திய காங்., நிர்வாகிகளுடன் மூன்று கட்ட ஆலோசனைகள் மேற்கொண்டார். இதன்
தொடர்ச்சியாக, மாநில காங்., தலைவர்கள் மற்றும் சட்டசபை காங்.,
தலைவர்களுடன், வரும், 15ம் தேதி, டில்லியில், ராகுல் ஆலோசனை
நடத்துகிறார்.அப்போது, பல்வேறு மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி சந்தித்து
வரும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும்.
வட்டார, ஒன்றிய அளவிலான காங்., தலைவர்களை சந்தித்து பேசவும் ராகுல்
விருப்பம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஜனார்த்தன் திவேதி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.