புதுச்சேரி
: "பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்போம்' என்ற கோஷத்துடன்,
புதுச்சேரி மாணவியர் மூவர், கன்னியாகுமரிக்கு சாதனை சைக்கிள் பயணத்தைத்
துவக்கினர். வைஸ்மேன் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவியர்
தேவி, மதிவதனா, தமிழரசி ஆகியோர், புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு
சைக்கிளில் சாதனை பயணம் மேற்கொண்டனர். இதற்கான துவக்க விழா, கடற்கரை
சாலையில் நேற்று மாலை நடந்தது. உ.பி.,யைச் சேர்ந்த விப்புல் ஷர்மா என்பவர்,
1,200 கி.மீ., தூரத்தை, 76 மணி, 10 நிமிடங்களில் கடந்து, லிம்கா சாதனை
புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த சாதனையை, புதுச்சேரி மாணவியர்,
புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து புதுச்சேரிக்கு
திரும்பி, 1,400 கி.மீ., தூரத்தை 72 மணி நேரத்துக்குள் கடந்து, முறியடிக்க
திட்டமிட்டுள்ளனர். லிம்கா சாதனை நிறுவனத்தினர், மாணவியரை பின்தொடர்ந்து
செல்கின்றனர். மாணவியர் கூறுகையில், "பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்
நீங்க வேண்டும். வன்கொடுமைகளுக்கு எதிராக நாங்கள் செல்லும் வழிகளில்
துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்க உள்ளோம்; லிம்கா சாதனை படைக்க உள்ளோம்'
என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.