புதுடில்லி : பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, டில்லியில், 12 ஆயிரம் ஆட்டோக்கள் மற்றும் டில்லி மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அனைத்து பஸ்களிலும், வாகனங்கள் செல்லும் இடங்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்கும், ஜி.பி.எஸ்., (குளோபல் பொஷிசனிங் சிஸ்டம்) கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.டில்லியில், கடந்த டிசம்பரில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, டில்லியில், பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து டில்லி போலீசார் கூறியதாவது: டில்லியில், 12 ஆயிரம் ஆட்டோக்களிலும், மாநகர போக்குவரத்து கழக பஸ்களிலும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், அந்த வாகனங்களை, போலீசார் அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடியே கண்காணிக்க முடியும். அதேபோல், பொதுமக்களை ஏற்றிச் செல்லும், அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., கருவியை, ஏப்ரல் மாத இறுதிக்குள் கட்டாயமாக பொருத்த வேண்டும் என, டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், அவசரகால உதவிக்கு, போலீசாரை அழைக்கும் எண்ணான, 100ன் இணைப்புகள், 60ல் இருந்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் தெரிவிக்கும் எண், 1091 என்பது, பத்து இணைப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.