புதுடில்லி
: விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவின், சமீபத்திய
சர்ச்சைக்குரிய பேச்சுகுறித்து, வழக்கு பதிவு செய்து, தகுந்த நடவடிக்கை
எடுக்கும்படி மகாராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தி
உள்ளது.ஆந்திராவின், எம்.ஐ.எம்., என்ற முஸ்லிம் கட்சியின், ஐதராபாத்
தொகுதி, எம்.பி., அசாதுதின் ஒவாய்சி. இந்துக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய
வகையில் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஸ்வ இந்து
பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா, மகாராஷ்டிர மாநிலம் நந்தத் மாவட்டத்தில்,
போகார் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில், குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த
தலைவர்களை விமர்சித்து பேசியிருந்தார். இது, பதற்றத்தை ஏற்படுத்தியதாக
குற்றச்சாட்டு எழுந்தது.இந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தும்படி, மத்திய அரசு, மகாராஷ்டிர அரசுக்கு
உத்தரவிட்டது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிர
முதல்வர் பிருதிவிராஜ் சவுகானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தொகாடியா
பேச்சு குறித்த முழுமையான ஆதாரங்கள் கிடைத்தால், அவர் மீது சட்டப்பூர்வ
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர்
தெரிவித்தார். இது குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக, மத்திய
அரசுக்கு, மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர்,
ஆர்.பி.என்.சிங், டில்லியில் கூறுகையில், ""தொகாடியாவின் பேச்சு,
வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக தெரியவந்தால், அவர் மீது கண்டிப்பாக
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை
அமைச்சர் நசீம் கான், "தொகாடியாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து
நடவடிக்கை எடுக்கும்படி' மாநில அரசை வலியுறுத்தியுள்ளார். மும்பையில்
பேட்டியளித்த அவர், ""மாநில உள்துறை அமைச்சர் பாட்டீலிடம், இது குறித்து
பேசினேன். இதையடுத்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். வன்முறையை
தூண்டியதாக ஒவாய்சி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோது, ஏன் தொகாடியா
மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.