புதுடில்லி
: ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில், குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டு, 10
ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட, அரியானா முன்னாள் முதல்வரும், இந்திய
தேசிய லோக்தளம் கட்சி தலைவருமான, ஓம்பிரகாஷ் சவுதாலா, தண்டனையை எதிர்த்து,
டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு செய்துள்ளார். இந்திய தேசிய லோக்தளம்
கட்சித் தலைவர், ஓம்பிரகாஷ் சவுதாலா, 78. இவர், அரியானா முதல்வராக, ஐந்து
முறை பதவி வகித்தவர். கடந்த, 2000ல், முதல்வராக பதவி வகித்தபோது, மாநில
கல்வித் துறை சார்பில், 3,206 பணியிடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட்டனர். இதில், ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, இந்த
வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. லஞ்சம் பெற்று, பணி நியமனம் செய்ததாகவும்,
போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகவும், ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகனும்,
இந்திய தேசிய லோக்தளம் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, அஜய் சிங் சவுதாலா உட்பட,
62 பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், சவுதாலா, அவரது மகன்
அஜய் சவுதாலா உட்பட, 55 பேர் குற்றவாளிகள் என, கடந்த மாதம் அறிவித்தது.
சவுதாலாவுக்கும், அவரின் மகனுக்கும், 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
உடன், அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சி.பி.ஐ.,
கோர்ட்டில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில்
சவுதாலா அப்பீல் செய்துள்ளார். அப்பீல் மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
எனக்கு
உடல் நிலை சரியில்லை; பல விதமான நோய் உபாதைகள் உள்ளன. சி.பி.ஐ., கோர்ட்
எனக்கு விதித்த தண்டனை சட்டத்திற்கு எதிரானது; ஆதாரங்களுக்கு முரணானது.
எனக்கு எதிரான இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது. ஜனநாயக அமைப்பில், கூட்டுப்
பொறுப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தால், அமைச்சரவையின்
முடிவுக்கு அனைத்து அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும். அதை விடுத்து,
ஆசிரியர் நியமனத்தில், ஒரு அமைச்சரை மட்டும் குற்றவாளி என, அறிவிப்பது
சரியல்ல. அதனால், எனக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைப்பதோடு, வழக்கையும்
ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.