Kamal Haasan thanks fans | மறுபடியும் தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு போய் விடுவேன் கமல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மறுபடியும் தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு போய் விடுவேன் கமல்

Added : பிப் 08, 2013 | கருத்துகள் (176)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை : ""அரசியலுக்கு வரும் மன நிலை எனக்கு இல்லை. என்னை மறுபடியும் தொந்தரவு செ ய்தால், நாட்டை விட்டு போய் விடுவேன்,'' என, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னையில் கமல் அளித்த பேட்டி:


"விஸ்வரூபம்' படம், ஆங்கிலப் படம் போல எடுத்திருப்பதாக, ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். படம் பிரச்னை தொடர்பாக, இனிமேல் அங்கலாய்க்கவோ, கண்ணீர் விடவோ வேண்டியதில்லை. படத்திற்கான என் உழைப்பு வீண் போகவில்லை. படத்திற்கு போட்ட பணத்தை மீண்டும் எடுத்து, கடனையும் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் துவங்கி விட்டன. சக கலைஞர்களின் ஒத்துழைப்பு, எனக்கு மேலும் மேலும் உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தூண்டியுள்ளது.

நடிகர் விஷாலுக்கு பிரச்னை :

நாங்கள் சமூகத்தின் நிலையை தான், சினிமா மூலம் பிரதிபலிக்கிறோம். சமூக பொறுப்புணர்வுடன், திரைப்படங்களை தயாரித்து வழங்குவேன். அரசியலுக்கு வர எனக்கு தனிப் பயிற்சி ஏதுமில்லை; அதற்கான மன நிலை எனக்கு இல்லை. காலம், வயோதிகம், வாழ்க்கை என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்து செல்லும். என்னை மறுபடியும் தொந்தரவு செ ய்தால், நாட்டை விட்டு போய் விடுவேன். என் பகுத்தறிவு வாதம், மனிதநேயம், யாரையும் கெஞ்சாமல் நடந்து கொண்டிருக்கிறேன். கடமையை மட்டும், நிறைவேற்றி வருகிறேன். விஸ்வரூபம் படத்தை பார்க்கும் இஸ்லாமியர்கள் பெருமைப்படுவர். எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் விஷாலுக்கு பிரச்னை என்றால், அவருக்காக நான் வாதாடவும் தயாராக இருக்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா, விஸ்வரூபம் படத்தை பார்க்க வேண்டும் என, விரும்புகிறேன். அவரை சந்திக்க நேரம் கேட்டு, கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

டி.டி.எச்.,சில் எப்போது?

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்., வாயிலாக வெளியிடுவது குறித்து கமலிடம் கேட்டபோது, ""தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் முதலில் வெளியிடப்பட்டதில், டி.டி.எச்., நிறுவனங்கள், என்மீது கோபத்தில் உள்ளன. அவர்களிடம், இனிமேல் தான் பேசி முடிவு செய்ய உள்ளேன். டி.டி.எச்., வெளியிடும் தேதி குறித்து தற்போது சொல்லமுடியாது,'' என்றார்.

இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின், திருட்டு, "சிடி' விற்னை, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் துவங்கியுள்ளது. சென்னையில், பர்மாபஜார், வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர் பகுதிகளில் இவை வெளியாகியுள்ளன.
600 தியேட்டர்கள் : தமிழகம் முழுவதும், நேற்று, 600 தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. தியேட்டர்கள் முன், ரசிகர்கள் பட்டாசு வெடித்து அமர்க்களப்படுத்தினர்.இப்படம், நேற்று முன்தினம், சென்னையில் நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது வீட்டிலேயே கமல் வெளியிட ஏற்பாடு செய்திருந்தார். ரஜினி மற்றும் குடும்பத்தினர், வீட்டிலேயே விஸ்வரூபம் படத்தை பார்த்தனர். சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரில், நடிகர், நடிகைகளுக்கும், சினிமா, வி.ஐ.பி.,களுக்கும் பிரத்தியோகமாக திரையிடப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (176)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elzhalan - belgium ,யுனைடெட் கிங்டம்
14-பிப்-201312:51:30 IST Report Abuse
elzhalan எல்லாம் நடக்க மேடை அதில் எங்கும் ரசிகர் கூட்டம்..............
Rate this:
Share this comment
Cancel
Senthil Kumar - coimbatore,இந்தியா
10-பிப்-201300:58:42 IST Report Abuse
Senthil Kumar ஹிண்டுவ கேலி பண்ணா இப்படித்தான்... நான் உங்க ரசிகன் தான் ... பட் நாட் நொவ்...
Rate this:
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
09-பிப்-201300:58:17 IST Report Abuse
பொன்மலை ராஜா சரி ... சரி ... புரிந்து கொண்டேன் ... படத்தை எல்லாரும் பார்க்க வேண்டும் ... கூட்டம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ... உலக நாயகனின் அடுத்த படம் வெளியாகும் வரை அரங்கு நிறைந்த காட்சிகளாகப் படம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் ... இல்லையேல் நீங்கள் ஓடி விடுவீர்கள் ... சரிதானே
Rate this:
Share this comment
Cancel
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
09-பிப்-201300:51:24 IST Report Abuse
Vanavaasam ஓஹோ .. வெளி நாடு சென்று விடுவார் .. கூத்தாடிக்கு கூத்தாட மட்டும் தான் தெரியும்.. ஒரு பெட்டி கடை கூட நடத்த தெரியாது... ஓஹோ .. வெளிநாட்டிலிருந்து இவர் தமிழ் படம் எடுப்பார்... நாம் இங்கு அரங்கம் சென்று இவர் படத்தை பார்க்க வேண்டியது .....அதாவது படத்தை ஏற்றுமதி செய்வார் ...தமிழ் மக்களின் பணம் மட்டும் கிடைத்தால் போதும் ... பலே ...
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
09-பிப்-201300:02:42 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy ஒருத்தர் வருவேன் ஆனா வரமாட்டேன்னுவார் இவரோ போய்டுவேன் பொஇடுவஎன்னுவார் போக மாட்டார் இவன கர்நாடகா தவிர எவனாவது கூப்பிட்டார்கள? அதிலிருந்தே தெரியலையா இவனோட பின்னால யாரு இருக்கான்னு? எல்லாம் சிதம்பர ரகசியமே இல்லை நிதி பண்ணுற சதியே எங்களோட அம்மாவ என்னடா உன்னோட மஞ்சளாடை மா முனிவர் மாதிரி வேலை இல்லாத வெட்டிப்பயல் என்று நினைத்தாயோ? உன்னோட படத்தை நீ அவர்கள் வீட்டில் போய் காட்டினாலும் பார்க்க மாட்டார்கள் உனக்கு மடி பிச்சை போட்டுள்ளார்கள் பிழைத்துகோல் மன்மதன் அம்பேல் தான் உன்னோட நண்பர் ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாதுன்னு இந்த நாட்டை கொள்ளை அடித்த கும்பலுக்கு உதவியதை ஆண்டவனே ஏற்கவில்லை அப்புறமா அவனையே அந்த கட்ச்சிக்கு ஓட்டுபோட வைத்தார்கள் அதே கதி தான் உனக்கு வரும் ஜாக்கிரதையாக பேசவும் சும்மா மேதாவி போல பேசக்கூடாது உன்னை Akbar ஒவேஷி பேசியதை கேட்கவைக்கணும் அப்போது தெரியும் உன்னை எப்படி நடத்தனும் என்று? எங்களோட முதல்வர் செய்தது மிகவும் சரி மட்டும் இல்லை ராஜ தந்திரமடா உன்னை மாதிரி பஞ்ச தந்திரம் செய்யலை உன்னை போல் ஒருவன் இல்லை தசாவதாரம் எடுத்தாலும் எத்தனை சகல கலா வல்லவன் வந்தாலும் பயப்பட மாட்டார்கள் எங்கள் அஞ்சா நெஞ்சம் புரட்ச்சிதலைவி ஏன் தெரியுமா? அவர் சிங்கம்டா இதோடு நிறுத்திடு இப்போது எங்கள் முதல்வர் பழைய ஜெயலலிதா இல்லை Matured பொலிடிசியன்
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
08-பிப்-201312:55:22 IST Report Abuse
Rajasekaran Palaniswamy ஒரு நீதிபதி படத்தை பார்த்துவிட்டு தடையை நீக்குகின்றார். இன்னொரு நீதிபதி தூக்க கலக்கத்தில் படத்தை பார்க்காமலேயே மீண்டும் தடை உத்தரவு போடுகின்றார். இதில் யார் செய்தது சரி. ஒன்று முதல் நீதிபதி ஓசியில் படம் பார்க்க ஆசைபடிருக்க வேண்டும். இல்லை பணம் வாங்கிக்கொண்டு தடையை நீக்கியிருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் தனது சொந்த கருத்தாக இருந்திருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் நேர்மையான நீதிபதியாக இருந்து உண்மையான தீர்ப்பை எழுதி இருக்க வேண்டும். இதில் எது சரி.
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
08-பிப்-201312:48:17 IST Report Abuse
dori dori domakku dori சென்று வா மகனே சென்று வா . அறிவை வென்று வா மகனே .வென்று வா .கன்று தாயை விட்டு சென்றபின்பும் .அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை .அறிவுலகம் உன்னை ஆப்பு அடிக்க அழைக்கின்றது..நீ .ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது.டிங்கரிங் பகுத்தறிவு உன்னிடத்தில் இருப்பதற்கு எல்லோம் உணர்தவன்போல் நடிப்பதற்கு மவனே உனக்கு பகுத்தறிவு நடிப்பு எதர்க்கு ????? சென்று வா மகனே சென்று வா அன்னிய செலாவணி இந்தியாவிற்கு மிச்சமாக.நிரந்தரமாக அமெரிக்கா.சென்று வா மகனே .சென்று வா ஆ ஆ ...........
Rate this:
Share this comment
Cancel
srajan - narasimhapuram ,இந்தியா
08-பிப்-201312:45:02 IST Report Abuse
srajan DTH இல் முதலில் வெளி இடுவதாக சொல்லி தியேட்டர் உரிமையாளர்கள் வயற்றில் மண் இட்டார். அதன் பின் இப்போது நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறுகிறார். என்ன நியாயம்?
Rate this:
Share this comment
Cancel
sami annachi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-பிப்-201312:39:39 IST Report Abuse
sami annachi கமல் சாரோட வயித்து பொலப்புக்கு தமிழ்நாட்டில் கஷ்டம் வருமானால் அவர் வேற நாட்டுக்கு போவேன் சொல்லுறார். நல்லது தானே. தன் பசிக்கு உணவு தேடி வேறு நாடு செல்வது ஒன்றும் புதிய விசயம் இல்லையே . நல்ல படியா போங்க சார்
Rate this:
Share this comment
Cancel
MSG - Kanagawa,ஜப்பான்
08-பிப்-201312:38:44 IST Report Abuse
MSG நம் இந்திய எல்லையில் நம் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழனும் மற்ற மாநிலத்தவருடன் நாட்டை காக்கிறான் குளிர் வெயில் குடும்பம் என்றும் பாராமல். பெத்த தாய் தகப்பனை நடுத்தெருவில் விட்டு விட்டு கமலுக்கு மணி ஆர்டர் அனுப்புகிறான் வீணாப் போன நம் தமிழன். உருப்படுமா தமிழகம்? கமல் பகுத்தறிவு பேசுவதற்கு மதச்சார்பற்ற இடங்கள் இரண்டு உள்ளது. ஒன்று வட துருவம். மற்றொன்று தென் துருவம். அங்கு போய் மதசார்பின்மையை பேசட்டும் கமல். அமெரிக்க டாலரில் " in god we trust" என்று அச்சிடப்பட்டிருக்கிறது. இவரது இத்துப் போன பகுத்தறிவுக்கு இது தெரியலையே? மொத்தத்தில் இந்த பேச்சு இத்தனை வயதாகியும் அவரது குழந்தைத்தனத்தை தான் காட்டுகிறது. கெளம்புங்க நம்ப வேலைய பாப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை