ராமநாதபுரம்: ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பட்டணம்காத்தான் அருகே, ரயில்வே மேம்பாலம் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலா வாகனங்கள் 10 கி.மீ., சுற்றி செல்வதால் எரிபொருள் விரயமாகி வருகிறது. மேலும், ரயில்வே கேட்டில் வாகன நெரிசலால் விபத்து அபாயமும் உள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை பல கோடி மதிப்பில் கடற்கரையை ஒட்டி கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டது. ரோடு பணிகள் முடிந்து பல மாதங்களாகியும், ராமநாதபுரத்தில் மட்டும் பட்டணம்காத்தான் அருகே ரயில்வே மேம்பாலம் பணிகளை பெயரளவில் செய்து, பயன்படுத்த முடியாத அபாயகரநிலையில் பாதியில் நிறுத்திவிட்டனர். தற்போது ராமேஸ்வரம், தேவிபட்டினம் பகுதியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் வரும் வாகனங்கள், ராமநாதபுரத்திற்குள் வந்து கீழக்கரை ரோடு ரயில்வே கேட் வழியாக மீண்டும் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல 10 கி.மீ., சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் எரிபொருள் விரயமாகி வருகிறது.மேலும், ரயில்வே கேட் அடைக்கப்பட்டுள்ள நேரத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் வரும் வாகனங்கள், வழி தெரியாமல் பாலம் வரை சென்று பின்னர் திரும்பி ராமநாதபுரத்திற்குள் வந்து கீழக்கரை ரோடு வழியாக செல்கின்றனர். பாலம் பணியை முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், என பலதரப்பிலிருந்து கோரிக்கை விடுத்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதியில் நிற்கும் பாலம் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சட்டசபையில் எம்.எல்.ஏ.,ஜவாஹிருல்லா குரல் கொடுக்க வேண்டும்.கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: ரயில்வே மேம்பால ரோடை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பக்கவாட்டு சுவர் மட்டுமே சேதமடைந்துள்ளதாக ஆய்வு குழுவினர் கருத்து தெரிவித்தனர். இதை சீரமைப்பதற்காக, பெங்களூரை சேர்ந்த "நெய்லிங்' ஐ.ஐ.டி., தொழில்நுட்ப ஆய்வு குழு சமீபத்தில் ஆய்வு செய்தது. இவர்களின் முயற்சியால், பாலம் பணி விரைந்து முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.