district news | சங்கராபுரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்ரமிப்புகள் அகற்றம்| Dinamalar

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்ரமிப்புகள் அகற்றம்

Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சங்கராபுரம்:சங்கராபுரம் நகரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
சங்கராபுரம் பேரூராட்சியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று துவங்கியது. நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் ஆண்ட்ரூஸ், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. அதிகாரிகள் நேரடி பார்வையில், பொக்லைன் இயந்திரத்தின் மூலம் நெடுஞ்சாலை ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன.
சங்கராபுரம் முதல் பாலமேட்டில் சாலை ஓரம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த 15 க்கும்மேற்பட்ட கூரை வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
வருவாய் ஆய்வாளர் கமலக்கண்ணன், வி.ஏ.ஓ., உமாபதி மற்றும் 50 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து இன்றும் ஆக்ரமிப்பு அகற்றும் பணி நடக்க உள்ளதாக உதவி கோட்ட பொறியாளர் சண்முகம் தெரிவித்தார்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை