திருப்புவனம்: மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், திருப்புவனம் பகுதியில் விற்பனைக்காக இடம் பெயர்ந்த,கிராம டாஸ்மாக் கடைகளால் ஆ(வி)பத்தும் அதிகரித்து வருகிறது.மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மணலூர், தட்டான்குளம், லாடனேந்தல் உள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தால், திருப்புவனம் நகருக்குரிய 2 கடைகளும் விதிமீறி கோயில் அருகே வைத்துள்ளனர். மேலராங்கியம் கிராம கடையை, திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கோயில் முன்பே வைத்துள்ளனர்.அதேபோல்,இளையான்குடி கடையை, சிவகங்கை மாவட்ட நுழைவு வாயிலான திருப்புவனம் மணலூரில் வைத்துள்ளனர். கீழடி கிராம கடையை தட்டான்குளத்திலும், வேம்பத்தூர் கிராம கடையை திருப்பாச்சேத்தியிலும்,லாடனேந்தல் கடையை பாப்பாங்குளம் விலக்கிலும், ஏனாதி கடையை மடப்புரம் விலக்கில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலும் வைத்துள்ளனர். மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை என்பதால், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், எளிதாய் கிடைக்கும் சரக்குகளை விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகின்றனர். மது குடிப்பதால் மதி இழந்து, ஊருக்கு செல்வதற்கு பதில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். விபத்து அதிகரிப்பால், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், விற்பனை, வசூலுக்காக இடம் பெயர்ந்த கிராம டாஸ்மாக் கடைகளை அகற்றினால், திருப்புவனம் பகுதியில் ஏற்படும் வி(ஆ)பத்துகள் குறைய வாய்ப்புண்டு.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.