சட்டசபையில், அமைச்சர் முனுசாமி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குழப்பம் விளைவித்ததாக, இன்று சபைக்கு வந்திருந்த, தி.மு.க., கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், அன்பழகன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், அன்பழகன், ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 14 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கவர்னர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டம், எதிர்க்கட்சி தலைவர் உரை மற்றும் முதல்வர் பதிலுரையுடன், இன்றுடன் முடிவடையும் நிலையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர், கூட்டத்தொடர் முழுவதும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
விதிப்படி, கூட்டத்தொடர் முழுவதும் என்றால், கூட்டம் முடிந்ததாக கவர்னர் மூலம் அறிவிக்கப்படும் வரை, நீக்கப்படுவதாக பொருள்படும் என்று கூறப்படுகிறது.
சபையில் இருந்தவர்கள் மீது தான் நடவடிக்கை என்பதால், சபைக்கு வராத, ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று பங்கேற்பர் என, கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.