மரக்காணம்:"கடலோரப் பகுதிகளில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும், உதவிக்கு, தமிழ்நாடு கடலோர காவல் படையை தொடர்பு கொள்ளலாம்' என, ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.
சென்னையில் இருந்து, இ.சி.ஆர்., வழியாக, கன்னியாகுமரிக்கு, தமிழ்நாடு கடலோர காவல் படையைச் சேர்ந்த 30 போலீசாருடன், ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில், சைலேந்திரபாபு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள், தீவிரவாதிகள் ஊடுருவல் போன்ற சம்பவங்களை கையாளும் விதம் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கி வருகிறோம். இது போன்ற சம்பவங்களின் போது, உள்ளூர் காவல் துறை, வருவாய் துறை, மீன்வளத் துறை ஆகிய அதிகாரிகளிடம் தகவல் கூறிய பின்னரே, கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கின்றனர். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது.
கடலோரப் பகுதிகளில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும், எங்களது இலவச டெலிபோன், "1093' என்ற எண்ணில் உடனடியாக தொடர்பு கொண்டால், அடுத்த சில நிமிடங்களில் அதிவிரைவு படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு எங்கள் பாதுகாப்பு படையினர் வந்துவிடுவர்.கன்னியாகுமரியில் மீனவர்கள் காணவில்லை என புகார் வந்த உடனே, ஹெலிகாப்டர் மூலம் விரைந்து சென்று கண்டுபிடித்தோம். இந்த சைக்கிள் பேரணி, மீனவக் கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இந்த பேரணியில், இந்திய கடலோர காவல் படை அதிகாரி பிரேம் கலந்து கொண்டுள்ளார்.
இவ்வாறு, சைலேந்திரபாபு கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.