E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கட்டுப்பாட்டு அறை மாற்றத்தால் தெளிவில்லாத கேபிள் ஒளிபரப்பு சந்தாதாரர்கள் ஏமாற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
01:13

சிவகாசி: அரசு கேபிள் "டிவி' கட்டுப்பாட்டு அறை இடமாற்றத்தால், தெளிவில்லாத ஒளிபரப்பால், சந்தாதாரர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். விருதுநகர் மாவட்ட கேபிள் கட்டுப்பாட்டு அறை, சிவகாசியில் சிவன்மாட வீதி நகராட்சி வணிக வளாக கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் கேபிள் லிங் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கேபிள் கட்டுப்பாட்டு அறை சிவகாசி கார்னேசன் பஸ் நிறுத்தம் அருகே மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ,சந்தாதாரர்களுக்கு தெளிவான ஒளிபரப்பு கிடைக்க வில்லை. கேபிள் கட்டுப்பாட்டு அறை மாற்றத்தால், ரிசவர், மாடுலேட்டர் போன்ற கருவிகள் பழுதடைந்துள்ளது. இதனால், சேனல்கள் பல மணிநேரம் தெரிவதில்லை. ஒரு சில மணிநேரம் தெரிந்தாலும், புள்ளி, புள்ளியாக ஒளிபரப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தெளிவான ஒளிபரப்பு செய்ய முடியாததால், மாத சந்தா வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சந்தா தொகை வசூலிக்க வேண்டும் என்ற நோக்கில் சில கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், டி.டி.எச்., மூலம் தங்கள் பகுதிக்கு உட்பட்ட லைன்களில், ஒரிரு சேனல்கள் மட்டும் தெரியும் வகையில் தற்காலிகமாக ஏற்பாடு செய்து, கேபிள் லைன்களில் இணைந்துள்ளனர். மாதம் 100 சந்தா தொகை செலுத்தும் வாடிக்கையாளர்கள், ஒரிரு சேனல்கள் மட்டும் பார்த்து வெறுப்படைந்து வருகின்றனர். ஒருசில கிராமங்களில் ஒருவாரமாக கேபிள் ஒளிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு கேட்டால், ஒவ்வொரு பகுதியாக சரி செய்கிறோம்.இன்னும் சில நாட்கள் ஆகும் என அலட்சியமான பதில் கூறுகின்றனர். "சந்தா தொகை வசூலித்தாலும், வசூலிக்காவிட்டாலும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை, ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக செலுத்த வேண்டியுள்ளது. கேபிள் லைன்களை விரைவாக சரி செய்து, தெளிவான ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கேபிள்டிவி நடத்துபவர்கள் கோரி வருகின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.