மேட்டூர்:இரு மாதங்களுக்கு பின் நடந்த, மேட்டூர் புது அனல்மின் நிலைய சோதனை ஓட்டத்துக்கு, நிலக்கரியால் சோதனை ஏற்பட்டது; இதனால், நேற்று மதியம், சோதனை ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேட்டூரில், 3,550 கோடி ரூபாய் செலவில் புதிதாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி, 2008 ஜூன், 25ல் துவங்கியது. 2011 செப்., மாதம் மின் உற்பத்தி துவங்க வேண்டிய நிலையில், 2012 மார்ச் இறுதியில் சோதனை ஓட்டம் துவங்கியது.
கடந்த அக்., 11ம் தேதி, சோதனை ஓட்டத்தின் போது, அதிகபட்சமாக, 608 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின், சோதனை அடிப்படையில், ஒரு சில நாள் மட்டுமே குறைந்த அளவில் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
கடந்த, டிசம்பர் முதல் வாரம் சோதனை ஓட்டத்தின் போது, வெப்பத்தை தாங்குவதற்காக, பாய்லர் உட்பகுதியை சுற்றிலும் பதித்திருந்த கற்கள் சேதமடைந்ததால், இரு மாதங்களாக சோதனை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த, 5ம் தேதி மீண்டும் சோதனை ஓட்டம் துவங்கியது.
நேற்று முன்தினம், முதல் கட்டமாக, எண்ணெய் மூலம் பாய்லர் சூடேற்றப்பட்டு, குறைந்த அளவில் மின் உற்பத்தி செய்த நிலையில், நேற்று காலை முதல், நிலக்கரி மூலம் மின் உற்பத்தி துவங்கியது. இதனால், ஆரம்பத்தில், 100 மெகாவாட் ஆக இருந்த, மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து நேற்று மதியம், 375 மெகாவாட் ஆக அதிகரித்தது.
சில மாதங்களுக்கு முன், நிலக்கரியை கொண்டு மின் உற்பத்தி செய்யும் போது, நிலக்கரி அரைக்கும் மில் இயந்திரங்களில் அதிர்வு ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. நேற்று, நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி துவங்கிய சில மணி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேட்டூர் புதுதெர்மலில், நிலக்கரி மூலம் சோதனை மின் உற்பத்தி துவங்கிய சில மணிநேரம் அல்லது ஒரு சில நாளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சோதனை மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கமாகி விட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.