pothu news | வாலடி - அரியலூர் இரு வழி ரயில் பாதை பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாலடி - அரியலூர் இரு வழி ரயில் பாதை பணி தீவிரம்

Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் கார்டு, ஓட்டுனர்களுக்கான ஓய்வறை கட்டடத்தை, திருச்சி கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் திறந்து வைத்தார். விழுப்புரம் ரயில் நிலைய பிளாட்பாரப் பகுதிகளை ஆய்வு செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் - திண்டுக்கல் வரை இரு வழி ரயில் பாதை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக, வாலடி - கல்லக்குடி பனங்காநத்தம் வரை முடிவு பெறும் நிலையில் உள்ளன. இதில் ஆய்வு முடிந்தவுடன், இந்த தடத்தில் சோதனை ரயில் ஓட்டம் இயக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக, விழுப்புரம் - விருத்தாசலம் - அரியலூர் வரை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் இந்தாண்டிற்குள் முழுமையடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.விழுப்புரம் - வேலூர் - மயிலாடுதுறை மார்க்கமாக, விரைவில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்.இவ்வாறு, கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை