தஞ்சாவூர்:"வறட்சியால்
பாதித்த விவசாயிகளுக்கு, உடனடியாக நிவாரணம் அறிவிக்க வலியுறுத்தி, தஞ்சை,
திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில், நாளை சாலை, ரயில்
மறியல் போராட்டம் நடத்தப்படும்' என, விவசாயிகள் சங்கத்தினர்
அறிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவிலுள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் நடந்தது.
தமிழகத்தில்
பருவமழை பொய்த்ததாலும், காவிரிநீரை வழங்காமல் கர்நாடகா கைவிரித்ததாலும்
விவசாயம் பாதித்து, கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதனால், டெல்டா
மாவட்டங்களில் நெல் உற்பத்தி கடுமையாக பாதித்ததோடு, விவசாயிகளின்
வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படுகிறது.
தமிழ்
மாநில விவசாய தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய
மாவட்டங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள், நாளை
நடத்தப்படும்.
அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களின் தாலுகா
தலைநகரங்களில், பிப்., 19ம் தேதி சட்டை நீக்கிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
நடப்பு சட்டசபை கூட்டத்திலேயே, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை, தமிழக
அரசு அறிவிக்க வேண்டும். விவசாய குத்தகை நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய
வேண்டும். விவசாய நிலங்களை, வேறு பயன்பாட்டுக்கு கையகப்படுத்தும்
நடவடிக்கையை தடுக்க வேண்டும் என, அரசை வலியுறுத்துவது என்பது உள்பட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.