சென்னை : கோழிகளை
தாக்கும், புதிய நோய்க்கான, தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், தமிழ்நாடு
கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு, அரசு, 22 லட்ச
ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில், கோழி வளர்ப்பு அபரிமிதமாக
வளர்ச்சியடைந்து வருகிறது. புழக்கடை கோழி வளர்ப்பாக மட்டுமே இருந்த, கோழி
வளர்ப்பு, 30 ஆண்டுகளில், பெரிய தொழிலாக மாறியுள்ளது.
கோழி வளர்ப்பு
அதிகம் இருக்கும் ஊர்களான, கோவை, நாமக்கல், பல்லடம், ஈரோடு உள்ளிட்ட
பகுதிகளில், கோழிகள், நச்சுயிரி நோய்களால், அதிகளவில், பாதிக்கப்படுகின்றன.
முன்,
வெள்ளை கழிச்சல், அம்மை நோய், சளி நோய் என, பலவித நோய்களால், கோழிகள்
அதிகளவில் பாதிக்கப்பட்டன. பின், இந்நோய்களிலிருந்து கோழிகளை பாதுகாக்க,
தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, கோழிகளின் இறப்பு கணிசமாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில்,
சில ஆண்டுகளுக்கு முன், சிறிய மூச்சு குழல் அழற்சி நோயால், அதிகளவில்,
கோழிகள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இந்நோயால் பாதிக்கப்பட்ட
கோழிகளுக்கு, மூச்சுக் குழல் வீக்கம் ஏற்பட்டு, சுவாசிக்க சிரமம்
ஏற்படுகிறது.
இதனால், முட்டை உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்நோயால் பாதிக்கப்படும் கோழி குஞ்சுகள், மூச்சு குழலின் வீக்கத்தால்,
சுவாசிக்க முடியாமல், இறந்து விடுகின்றன.
இந்நோயிலிருந்து, கோழிகளை
பாதுக்கும் பொருட்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், புதிய
தடுப்பூசியை கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, அரசு, 22
லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து, கால்நடை நல கல்வி மைய இயக்குனர் புருஷோத்தமன் கூறியதாவது:
கோழிகளை
தாக்கும் புதிய வகையான, நச்சுயிரியை கண்டறியும் பணி, மாதவரம், தமிழ்நாடு
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக, மத்திய ஆய்வு கூடத்தில் நடந்து வருகிறது.
இந்த ஆய்வில், கால்நடை மருத்துவ நுண்ணுயிரியல் துறை விஞ்ஞானிகள் ஈடுபட்டு
வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட கோழியின், நுரையீரல், மூச்சு குழல்
ஆகியவற்றிலிருந்து நச்சு கிருமியை பிரித்து எடுத்து, அதன் தன்மையறிந்து,
ஏற்கனவே உள்ள கிருமியுடன் எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதை கண்டறியும் பணிகளை
மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு புருஷோத்தமன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.