சென்னை:பத்தாம்
வகுப்பு மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வை, இம்மாதம், 20ம் தேதி
முதல், 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். அவரது அறிவிப்பு: மார்ச்சில்
நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, நேரடி தனி தேர்வராக எழுதும் மாணவ,
மாணவியர், அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில் கலந்துகொண்ட பள்ளிகளிலேயே
நடக்கும் செய்முறைத் தேர்விலும் பங்கேற்க வேண்டும்.
செய்முறைத்
தேர்வுகள், இம்மாதம், 20ம் தேதி மதல், 28ம் தேதி வரை, சனிக்கிழமை உட்பட,
அனைத்து வேலை நாட்களிலும், காலை, மாலை என, இரு வேளைகளிலும் நடக்கும்.
செய்முறைத்
தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்'டை, சம்பந்தபட்ட, மாவட்ட கல்வி
அலுவலர்களிடம், இம்மாதம், 18ம் தேதி முதல், 20ம் தேதி வரை, பெற்றுக்
கொள்ளலாம்.
செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான, செய்முறை நோட்டு
புத்தகத்தை, செய்முறைத் தேர்வு மையத்தில், காட்ட வேண்டும். புகைப்படத்துடன்
கூடிய, "ஹால் டிக்கெட்' பெறும் தேர்வர் மட்டுமே, எழுத்து தேர்வுக்கு
அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.பள்ளிகளில் பயிலும், 10 லட்சம் மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வு தேதி குறித்து, அறிவிப்பில் இடம்பெறவில்லை. இதுகுறித்து,
இயக்குனர் கூறுகையில், "பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ,
மாணவியருக்கும், மேற்கண்ட தேதிகளில் தான், செய்முறைத் தேர்வு நடக்கும்' என,
தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.