பவர் பத்திரம் மூலம் சொத்து பரிவர்த்தனைக்கு புது கட்டுப்பாடு: மோசடியை தடுக்க பதிவுத்துறை நடவடிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சிவகங்க : பொது அதிகார ஆவணங்களை (பவர் பத்திரங்களை) பயன்படுத்தி, சொத்து விற்பனையை பதிவு செய்யும் போது, "பவர்' கொடுத்தவர், உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்கான, மருத்துவ சான்றிதழ் கட்டாயமாக இருக்க வேண்டும் என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. வீடு, மனை போன்ற அசையா சொத்துக்கள் தொடர்பான பரிவர்த்தனையில், அதன் உரிமையார் தான் விற்பனை செய்ய வேண்டும். எல்லாராலும் நேரடியாக பரிவர்த்தனை செய்ய முடியாது என்பதால், பொது அதிகார ஆவணம் பயன்பாட்டுக்கு வந்தது.
உரிமையாளர்கள், தங்கள் சார்பாக, அந்த குறிப்பிட்ட சொத்தை விற்பது, மேம்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள, தங்களுக்கு நம்பகமானவர்களுக்கு அதிகாரம் அளிப்பர். இது பொது அதிகார ஆவணம் எனப்படும்.மோசடி
ஆனால், அண்மைக்காலமாக, நிலங்களை வாங்கி, விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சொத்தின் உரிமையாளரை அணுகி, ஒரு குறிப்பிட்ட விலையை பேசி, அந்தத் தொகைக்கு தங்கள் பெயரில் கிரைய பத்திரம் பதிவு செய்யாமல், பவர் பத்திரம் மட்டும் வாங்கி கொள்கின்றனர்.
இந்த ஆவணத்தை பயன்படுத்தி, தங்கள் விருப்பம் போல், அதிகபட்ச விலைக்கு சொத்துக்களை விற்கின்றனர். சிலர், சில ஆண்டுகள் கழித்து கூட சொத்தை விற்கலாம். அப்போது பவர் கொடுத்தவர் உயிருடன் இருந்தால் மட்டுமே பவர் பத்திரம் செல்லும்.
ஆனால், பல இடங்களில் பவர் கொடுத்தவர் இறந்த நிலையிலும், சொத்துக்கள் விற்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
சுற்றறிக்கை
இதைக்கருத்தில் கொண்டு, பவர் பத்திர அடிப்படையில் சொத்து பரிவர்த்தனையை பதிவு செய்யும் நடைமுறைகளுக்கு சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பதிவுத்துறை தலைமையகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பவர் பத்திரத்தின் அடிப்படையில், அதிகாரம் பெற்ற முகவரால் மேற்கொள்ளப்படும் சொத்து பரிமாற்றத்தை பதிவு செய்யும்போது, பவர் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றிதழ், கட்டாயம் இருக்க வேண்டும்.
அந்த சான்றிதழில், பவர் கொடுத்தவரின் புகைப்படம், கையொப்பத்துடன் பதிவு பெற்ற மருத்துவ அலுவலர் அல்லது மத்திய, மாநில அரசின், "ஏ' பிரிவு அதிகாரி, தேதியுடன் சான்றளித்திருக்க வேண்டும்.
இந்த சான்றிதழ், 2013 பிப்., 1 க்கு பின், பெறப்பட்டதாக இருக்க வேண்டும். சொத்து பதிவு செய்யப்படும் நாளுக்கு, 30 நாள்களுக்குள் இச்சான்று வாங்கப்பட்டிருக்க வேண்டும்.
இத்தகைய சான்றின் அசலை ஆய்வு செய்து, அதன் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதியை பதிவு செய்யப்படும் ஆவணத்துடன் இணைக்க வேண்டும்.
பொது அதிகார ஆவணங்கள் மூலம் கிரையம் பெறப்படும் ஆவணங்களுக்கு, இத்தகைய சான்று தேவையில்லை. நிறுவனங்களால் கொடுக்கப்படும் அதிகார ஆவணங்களுக்கு இது பொருந்தாது.
பவர் கொடுக்கப்பட்ட, 30 நாள்களுக்குள் பதிவு செய்யப்படும் பரிவர்த்தனை ஆவணங்களுக்கு இது தேவையில்லை. வெளி நாடுகளில் வசிப்பவர் எழுதி கொடுக்கும் பவர் பத்திரங்களுக்கு, இச்சான்று அவசியம்.
இதற்கான விவரங்களை பொது அதிகார ஆவணங்களை பதிவு செய்ய வருவோர், அதன் அடிப்படையில் பரிவர்த்தனை ஆவணங்களை பதிவு செய்ய வருவோருக்கும் அதிகாரிகள் இந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்