சென்னை:"ரயில்
டிரைவர்கள் பணி நேரத்தை, ஆறு மணி நேரமாக குறைக்க வேண்டும். வார விடுமுறை
வேண்டும்' என, வலியுறுத்தி, அகில இந்திய ரயில் ஓட்டுனர்கள் சங்கத்தின்
சார்பில், நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை
சென்ட்ரல், மூர்மார்க்கெட் ரயில் நிலையம் முன்பாக, நடந்த
ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய ரயில் ஓட்டுனர்கள் சங்கத்தின், தெற்கு
ரயில்வே பொதுச்செயலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சென்னை ரயில்வே கோட்ட
பொதுச்செயலர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ரயில் ஓட்டுனர்கள்
தினம், 12 லிருந்து 13 மணி நேரம் வரை, பணிபுரிய வேண்டியுள்ளது. இதனால்,
மனித தவறுகள், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பணி நேரத்தை, ஆறு மணி
நேரமாக குறைக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள், ஓய்வு வழங்க வேண்டும்.
தற்போது,
வாரத்தில் ஆறு இரவுகள் ரயில் இயக்க வேண்டியுள்ளது. இதனாலும், விபத்து
ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், வாரத்தில், இரண்டு இரவுகள் மட்டுமே, பணி
செய்யும் வகையில், வேலை நேரம் மாற்றியமைக்கப்பட வேண்டும். சரக்கு ரயில்
ஓட்டுனர்கள் குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் பணி முடித்து செல்ல,
வரையறை செய்யப்படவேண்டும்.
ரயில் இன்ஜின் அறை என்பது ஒரே மாதிரி
அமைப்புகளில் இல்லை. வெவ்வேறு விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனால்,
நெருக்கடி நேரத்தில் ரயில் இயக்குவதற்கு, ஓட்டுனர்களுக்கு, திடீர்
தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலை தவிர்க்கப்பட, ரயில் இன்ஜின் அறை,
ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டு, அதில், "ஏசி' வசதி செய்து தரப்பட வேண்டும்.
கழிப்பறை வசதியும் தேவை. பணியிடங்களில் உள்ள, குறைபாடுகளை போக்குவதற்கு, ரயில்வே வாரிய உத்தரவு ஏற்கனவே உள்ளது. அதை அமல்படுத்த வேண்டும்.
மொத்தம்,
14 கோரிக்கைகளுடன் நடத்தப்பட்ட, ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட,
ரயில் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். சென்னை சென்ட்ரல், திருவொற்றியூர்,
அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டையில்,ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.