சிவகங்கை:சிவகங்கை அருகே, "லைசென்ஸ்' இன்றி செயல்பட்ட பட்டாசு கடையில், தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
மேலப்பூங்குடியை சேர்ந்தவர் போஸ், 48. இவருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ்
மதகுபட்டியில் உள்ளது. இங்கு, போஸும் நாமனூரை சேர்ந்த செந்தில்குமார், 35,
என்பவரும், லைசென்ஸ் இன்றி பட்டாசு கடை நடத்தினர். இந்த கடையில், பிப்., 6
இரவு தங்கியிருந்த செந்தில்குமார், மொபைல் போனை சார்ஜில் போட்டிருந்தார்.
அதில், மின்கசிவு ஏற்பட்டு, கடையில் இருந்த பட்டாசுகள் தீப்பற்றி எரிந்தன.
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் சாம்பலாயின. தீயணைப்பு வீரர்கள் தீயை
அணைத்தனர். விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. மதகுபட்டி போலீசார்,
"லைசென்ஸ்' இன்றி பட்டாசு விற்றதாக, போஸ், செந்தில்குமாரை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.