திருப்பூர்:பள்ளி
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் மீது, குண்டர் தடுப்பு
சட்டத்தில், நடவடிக்கை எடுக்க கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.
உடுமலையை
சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி, பள்ளிக்குச் செல்லும்போது, அதே பகுதியை
சேர்ந்த நாகராஜ், 32, என்பவன், பாலியல் பலாத்காரம் செய்தான். அவமானமடைந்த
அச்சிறுமி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.
தீக்காயங்களுடன்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அச்சிறுமி தாயார் அளித்த
புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து, உடுமலை போலீசார், நாகராஜை கைது
செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் துரித விசாரணைக்கு எஸ்.பி.,
அளித்த உத்தரவின் பேரில், புலன் விசாரணை நடத்தி, 18 நாட்களுக்குள், உடுமலை
ஜே.எம்., கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது,
இவ்வழக்கு, திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாகராஜ்
போன்ற நபர்கள் வெளியே நடமாடினால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும்.
இதுபோன்ற குற்றங்களில் வேறு யாரேனும் ஈடுபடக்கூடாது என்பதாலும், நாகராஜ்
மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, திருப்பூர் கலெக்டர்
கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.