ஈரோடு: தமிழக அரசின் இலவச கொள்கையால், அம்மிக்கள் தயாரிப்பு தொழில் பாதிப்படைந்ததாக, அம்மிக்கல் தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.
பழங்காலத்தில் தமிழகத்தில் அம்மிக்கல், ஆட்டுக்கலில் மசாலா அரைத்து, உணவு சமைக்கும் பழக்கம் இருந்தது. அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்து, சாப்பிட்டால் அதற்கு ருசி அதிகம் என மக்கள் மத்தியில் கருத்து நிலவியது. இதனால், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
நாளடைவில் நாகரீக மாற்றத்தால், விரைவாக அரைக்கும் மிக்ஸி, கிரைண்டருக்கு மக்கள் மாறியதால், ஆட்டுக்கல், அம்மிக்கல் உற்பத்தி குற்றுயிரும் குலை உயிருமானது. தற்போது, இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றை அரசு வழங்கி வருவதால், ஆட்டுக்கல், அம்மிக்கல் தொழில் முற்றிலும் முடங்கியது.
இதுகுறித்து அம்மி, ஆட்டுக்கல் தொழிலாளர்கள் கூறியதாவது:
நாமக்கல் பகுதியில் இருந்து, கரும்பாறைகளை வாங்கி வந்து, அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிக்கிறோம். அம்மிக்கல், 750 ரூபாய்க்கும், ஆட்டுக்கல், 1,200க்கு விற்பனையாகிறது.
ஒவ்வொரு தொழிலையும் அழியாமல் பாதுகாப்பது அரசின் கடமை. கடந்த ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி, அரசின் கொள்கையால் பல தொழில்கள் முடங்கியது. கடந்த ஆட்சியில், "டிவி'யை இலவசமாக வழங்கியதால், "டிவி' விற்பனையாளர்களும், ஷோரூம்களும் பெருத்த நஷ்டமடைந்தனர்.
தற்போதைய அரசு, மக்களுக்கு இலவசமாக, ஃபேன், மிக்ஸி, கிரைண்டரை வழங்கி வருவதால், இதன் விற்பனையும் இனி முடங்கும். மிக்ஸி, கிரைண்டர் வருகையால், அம்மி, ஆட்டுக்கல் விற்பனை மந்தமானது. இந்நிலையில், மக்கள் அனைவருக்கும், மிக்ஸி, கிரைண்டரை அரசு இலவசமாகவே வழங்கி வருவதால், எங்கள் தொழில் மேலும் பாதிப்படையும் அபாயம் உள்ளது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.