court news | சேப்பாக்கம் மைதான காலரிகளுக்கு "சீல்' வைத்தது செல்லாது: ஐகோர்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சேப்பாக்கம் மைதான காலரிகளுக்கு "சீல்' வைத்தது செல்லாது: ஐகோர்ட்

Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: "சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், மூன்று காலரிகளுக்கு, மாநகராட்சி, "சீல்' வைத்தது செல்லாது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற, புதிதாக விண்ணப்பிக்கும் படியும், உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கத்தில், எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்கு, பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்கு, "ஐ', "ஜே', "கே' என, புதிதாக, மூன்று காலரிகள் கட்டப்பட்டன. இந்த காலரிகளைப் பயன்படுத்த, சென்னை மாநகராட்சி அனுமதிக்கவில்லை.
முறையான அனுமதி பெறவில்லை எனக் கோரி, அவற்றை இடிக்க வேண்டும் என, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. மேலும், மூன்று காலரிகளையும் மூடி, "சீல்' வைக்கவும், மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, "டி-20' கிரிக்கெட் போட்டிக்காக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, மூன்று காலரிகளையும் பயன்படுத்த, அனுமதி பெற்றது.
கடந்த ஆண்டு, டிசம்பரில், இந்தியா - பாகிஸ்தான், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்காக, ஐகோர்ட்டை அணுகியது. அப்போதும், மூன்று காலரிகளையும் பயன்படுத்திக் கொள்ள, ஐகோர்ட், இடைக்கால அனுமதி வழங்கியது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும நடவடிக்கைகளை எதிர்த்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தாக்கல் செய்திருந்த மனுவை, நீதிபதிகள் தர்மாராவ், அருணா ஜெகதீசன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட்டின், இடைக்கால உத்தரவுகளைத் தொடர்ந்து, மூன்று காலரிகளையும், இரண்டு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியுள்ளனர். அப்போது, எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இதன் மூலம், எதிர் தரப்பில் தெரிவிக்கப்படும் யூகங்கள் சரியல்ல என, நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த காலரிகளுக்கு, "சீல்' வைத்த, மாநகராட்சியின் உத்தரவை, சட்டப்படி ஏற்கமுடியாது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை கோரி, ஒரு வாரத்திற்குள், மனுதாரர் விண்ணப்பிக்க வேண்டும். அதை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆறு வாரங்களுக்குள், சட்டப்படி பைசல் செய்ய வேண்டும். இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை