சென்னை:
"பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவாக கருதி, உதவியாளர் பணிக்கு
தேர்ந்தெடுக்க வேண்டும்' என, மதம் மாறிய பெண்ணின் கோரிக்கையை, சென்னை
ஐகோர்ட் நிராகரித்தது.
ஊரக மேம்பாட்டுத் துறையில், உதவியாளர் பணிக்காக,
பாத்திமா என்பவர் விண்ணப்பித்தார். தேர்வுப் பட்டியலில், 4,847 வரிசையில்
இருந்தார். இதர வகுப்பினர் பிரிவில், இவரது பெயர் இருந்தது. இதையடுத்து,
ஐகோர்ட்டில், பாத்திமா தாக்கல் செய்த மனு: பிற்படுத்தப்பட்ட பிரிவில்,
பெண்களுக்கான கட்-ஆப், 198 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. நான் பிறப்பால்
இந்து; செங்குந்தர் சமூகத்தில் பிறந்தேன். இஸ்லாம் மதத்துக்கு மாறி,
திருமணம் செய்து கொண்டேன். எனக்கு, காஞ்சிபுரம் துணை தாசில்தார்,
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்தவர் என, சான்றிதழ் அளித்தார்.
எனவே, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என கருதி, தேர்வுப் பட்டியலில், என்னை
சேர்க்க உத்தரவிட வேண்டும். பணியில் என்னை நியமிக்க, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு,
மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த
உத்தரவு: திருமணத்துக்கு முன், இந்து மதத்தில், மனுதாரர் இருந்துள்ளார்.
திருமணத்துக்காக, தனது ஜாதியை அவர் மாற்றிக் கொள்ள முடியாது. கலப்பு
திருமணம் அல்லது இரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஆன திருமணம் மூலம்,
கணவனின் ஜாதியைச் சேர்ந்தவராக, மனைவி ஆக முடியுமா என்கிற கேள்விக்கு,
சுப்ரீம் கோர்ட் விடை அளித்துள்ளது. லெப்பை முஸ்லிம் (பிற்படுத்தப்பட்ட
பிரிவு) என, துணை தாசில்தார் அளித்த சான்றிதழை, ஏற்க முடியாது. ஏனென்றால்,
மனுதாரர், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல; அவரது கணவர் தான், அந்த
சமூகத்தைச் சேர்ந்தவர். அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள,
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைப் பார்க்கும் போது, ஆதிதிராவிட சமூகத்தைச்
சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருந்தால், அவர்களை
பிற்படுத்தப்பட்டோராக கருதுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது;
ஆனால்,
முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்களை, பிற்படுத்தப்பட்டோராக கருத வேண்டும் என,
குறிப்பிடப்படவில்லை. எனவே, தன்னை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவாக
கருதி, பணியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என, மனுதாரர் கோருவதை ஏற்க
முடியாது. முதலில், டி.என்.பி.எஸ்.சி., முன், எந்த சான்றிதழையும், மனுதாரர்
சமர்பிக்கவில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.