சென்னை:சென்னை ஐகோர்ட்டுக்கு, புதிய கூடுதல் அட்வகேட் - ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, 69, நியமிக்கப்பட்டுள்ளார்.ஐகோர்ட்டில், அட்வகேட் - ஜெனரலாக நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் - ஜெனரல்களாக, சேதுராமன், கோமதிநாயகம், அரவிந்த் பாண்டியன், மதுரை ஐகோர்ட் கிளையில், செல்லபாண்டியன், சுப்ரீம் கோர்ட்டில், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் உள்ளனர். தற்போது, ஐகோர்ட்டுக்கு, புதிய கூடுதல் அட்வகேட் - ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் சோமயாஜி நியமிக்கப்பட்டுள்ளார். முதலாவது கூடுதல் அட்வகேட் - ஜெனரலாக, இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, இரண்டு ஆண்டுகள், கூடுதல் அட்வகேட் - ஜெனரலாக, இவர் பதவி வகித்தார். ஐகோர்ட்டில், மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து, 1994ம் ஆண்டு வழங்கப்பட்டது. சென்னை துறைமுகம், சென்னை உர நிறுவனம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், இந்தியன் வங்கி என, பொதுத் துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்களுக்கு, சட்ட ஆலோசகராக உள்ளார். ஐகோர்ட் விதிகள் குழுவின், செயலராகவும் உள்ளார்.