கோவை:மனைவிக்கு தொல்லை கொடுத்த நண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு, கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.கோவை பெரியநாயக்கன்பாளையம், மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் பரமசிவம்; இவரது நண்பர் பாலகிருஷ்ணன். இருவரும், இப்பகுதியில் உள்ள பிரிக்கால் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி, கட்டாய ஓய்வு பெற்றவர்கள். இச்சூழலில், தனது மனைவிக்கு, நண்பர் பாலகிருஷ்ணன் டார்ச்சர் கொடுப்பதை அறிந்த பரமசிவம், பலமுறை கண்டித்துள்ளார். இதை பாலகிருஷ்ணன் கேட்காததால், பரசிவம் ஆத்திரம் அடைந்தார். கோபத்தை வெளிக்காட்டாமல் வழக்கம்போல், நட்பாகவே பாலகிருஷ்ணனுடன் பழகினார். கடந்த 2010, ஜூலை 1ம் தேதி, இரவு 9:30 மணிக்கு, ஸ்கூட்டரில் வந்த பரமசிவம், பெட்ரோல் வாங்க போகலாம் எனக்கூறி பாலகிருஷ்ணனை அழைத்து சென்றார். இடிகரை ரோட்டில் இருட்டுப் பகுதியில் சென்றபோது, திடீரென ஸ்கூட்டரை நிறுத்தினார் பரமசிவம். "எதற்காக ஸ்கூட்டரை இருட்டில் நிறுத்துகிறாய்' என யோசிப்பதற்குள், பாலகிருஷ்ணன், கடுமையாக தாக்கப்பட்டார்.படுகாயமடைந்து சழே விழுந்த பாலகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே பலியானார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்து, பரமசிவத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, கோவை நான்காவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சிவகுமார் ஆஜரானார். வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி இளங்கோ, குற்றம் சாட்டப்பட்ட பரமசிவத்துக்கு, ஆயுள் சிறை தண்டனை, இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.