கூடலூர்; கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். கூடலூர் நகராட்சியாக தரம் உயர்த்தி பல ஆண்டுகளாகியும், இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இதுவரை தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இங்கு தினந்தோறும் 700க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். குறிப்பாக, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்திற்காக மாத்திரைகள் தருவதால்,நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு ஒரு தலைமை டாக்டர் மற்றும் 3 டாக்டர்கள் பணியில் உள்ளனர். இதில் மாற்றுப்பணி, விடுமுறை என ஓரிரு டாக்டர்கள் சென்று விடுகின்றனர். இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். நேற்று, ஒரு டாக்டர் மட்டுமே வந்ததால், சிகிச்சைக்கு வந்த ஏராளமான நோயாளிகள், பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். பல வயதான பெண்கள் மயக்கமடைந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி பல நோயாளிகள் சிகிச்சை பெறாமல் திரும்பிச் சென்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.