drinks habit raised: wife murdered | குடி படுத்தும் பாடு : 70 வயது மனைவியை கொலை செய்த 75 வயது கணவர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடி படுத்தும் பாடு : 70 வயது மனைவியை கொலை செய்த 75 வயது கணவர்

Added : பிப் 08, 2013 | கருத்துகள் (44)
Advertisement
drink habitraised: wife murdered

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, மதுபானம் குடிப்பதற்காக, தங்க தாலிச்செயினை அடகு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மனைவி பெரியபிராட்டியை, 70, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த, கணவர் அர்ச்சுனன், 75, கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், மேலஆழ்வார் தோப்பைச் சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மனைவி பெரியபிராட்டி. இவர்களுக்கு, 6 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும், திருமணமாகிவிட்டன. இளமை முதலே, எந்த வேலைக்கும் செல்லாமல், ஊர் சுற்றிய அர்ச்சுனன், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். திருமணத்தின்போது, மனைவி பெரியபிராட்டி, சீதனமாக தந்த, 70 பவுன் தங்க நகை, தன் குடும்பத்திற்கு சொந்தமான, 14 ஏக்கர் நிலத்தையும், அடகுவைத்து, விற்று, அதில் கிடைத்த பணத்தில், அர்ச்சுனன் மதுகுடித்தார். வீட்டில் இருந்த, பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களையும், குடும்ப சொத்துக்களையும், மதுகுடித்தே அவர் அழித்துவிட்டதால், அவரிடம், பெரியபிராட்டி, சமீபகாலமாக பேசாமலிருந்தார்.
மனைவியை எழுப்பி பணம் கேட்பு : மேலஆழ்வார்தோப்பில் இருவரும், அடுத்தடுத்த வீட்டில் வசித்தனர். அவ்வப்போது, வெளியூர்களிலுள்ள மகன், மகள் வீட்டிற்கு பெரியபிராட்டி சென்றுவிடுவார். மகன்கள், செலவிற்கு மாதந்தோறும் பணம் அனுப்பினர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெரியபிராட்டியை, எழுப்பிய அர்ச்சுனன், மதுகுடிக்க பணம் தேவைப்படுவதால், அடகு வைக்க, அவர் அணிந்திருந்த, ஏழுபவுன் தங்கதாலிச் செயினை தருமாறு வற்புறுத்தினார். அதற்கு, அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அர்ச்சுனன், அரிவாளால், பெரியபிராட்டி கை, தலையில் வெட்டினார். கை விரல் துண்டாகி, தலையில் பலத்த காயமடைந்த பெரியபிராட்டி, அங்கேயே இறந்து போனார். அவரிடமிருந்து, தாலிச்செயினை பறித்துக்கொண்டு, தப்பியோடிய அர்ச்சுனன், ஏரல் நகைக்கடையில், அதனை அடகு வைக்கும்போது, ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரை, கைது செய்தனர்.

குடிக்கக் கூடாது என கண்டித்த மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்

அன்னூர், : கோவை அருகே, அன்னூரில் குடிப்பதை கண்டித்த மனைவி மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை, போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், அன்னூர், கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வரதராஜ், 34; பெயின்டர். இவரது மனைவி முருகேஸ்வரி, 30. இவர்களுக்கு நான்கு மற்றும் ஒன்றரை வயதில் இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் 2008ல் திருமணம் நடந்தது. எட்டு மாதங்களுக்கு முன், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, முருகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஆறு மாதங்களுக்கு முன், கணவன் வரதராஜ், மாமனார் வீட்டுக்குச் சென்று, இனி தகராறு செய்ய மாட்டேன் என்று கூறி, மனைவியை அழைத்து வந்தார்.


நேற்று முன்தினம், கெம்பநாயக்கன்பாளையம் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது, முருகேஸ்வரி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கணவர் வரதராசும், மற்றவர்களும், முருகேஸ்வரியை, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு,

முருகேஸ்வரி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம்:


கணவர் வரதராஜை மது குடிக்க வேண்டாம் என, பல முறை கூறினேன். ஆனால் கணவர் திருந்தவில்லை. வேலைக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. குடிக்காமல் வீட்டில் இருந்தால் போதும் என்றும் கூறினேன். கடந்த 6ம் தேதி, "இன்றாவது குடிக்காமல் வேலையிலிருந்து வீட்டுக்கு வா' என்று கூறினேன். "நான் அப்படித்தான் குடிப்பேன்' என்று கூறி, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து, என் மீது ஊற்றினார். பின்னர் நெருப்பு பற்ற வைத்து விட்டார். இவ்வாறு, முருகேஸ்வரி வாக்குமூலத்தில் தெரிவித்தார். முருகேஸ்வரியின் தாடையில் துவங்கி, நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மனைவியை தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற கணவனை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
libiprabu - chennai,இந்தியா
08-பிப்-201314:18:42 IST Report Abuse
libiprabu சாராய வியாபாரிகளிடம் சமூக நல்லெண்ணத்தை எதிர்பார்க்க முடியாது .... அஸ்திவார கற்களை ஒவ்வொன்றாய் உருவி கட்டும் கோபுரம் என்றுமே நிலைக்காது
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
08-பிப்-201314:04:26 IST Report Abuse
Snake Babu கொலை செய்தலுக்கான பாவத்தில் ஒரு பங்கு அந்த பெரியவருக்கு(?, ) அடுத்த பங்கு ஆட்சி செய்பவர்களுக்கு, அடுத்த பங்கு அந்த ஆட்சியில் பங்கேற்பவர்களுக்கு, கடைசி பங்கு ஆட்சியை ஏற்படுத்தி கொடுத்த நமக்கு......... பாவம் எப்படி இருக்கும், இருந்தான் செத்தாணு இருக்காது. என்னனு, எதனால வந்ததுன்னு தெரியாமலே வரகூடாதெல்லாம் வந்து, போகவும் முடியால் ஒரு வாழ்வு......... ஏதோ என்று கற்பனை செய்யாதீர்கள். நாம் வாழும் தற்போதைய வாழ்க்கை தான்.... ஒரு படிக்கு மேல அத சாப்பிட முடியாது, இத சாப்பிட முடியாது, இத ஆனா அலர்ஜி, அதுன அலர்ஜி, மாத்திரை போட்டும் தூக்கம் இல்லாம இருப்பது.......... இப்படி பல... சிலது வெளியேயும் சொல்ல முடியாது..... இது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என்று கேட்க தோன்றும், தற்போது சிலர் உயிர் இழந்திருக்கிரார்கல், இந்த குடியால் தினம் தோறும் எவ்வளவு மனக்குமுறல்கள், கொடுமைகள், எவ்வளவு மன இறப்பு, வாலிப இறப்பு, காதல் இறப்பு, சகோதர இறப்பு,... இப்படி எவ்வளவு இறப்பு............இதற்க்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும் என்று கேள்வி கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் பதில் கிடைக்கும். பொறுப்பாக நாம் என்ன செய்ய வில்லை என்று கேள்வி கேட்டால், நல்ல பதில்கள் பல கிடைக்கும். ................பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒரு அரசாங்கம். அதையும் தனக்கு வேண்டியவர் மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு அதிகார துஷ்பிரயோகம்.. இருந்தால் கடவுள் தனியாக சுனாமியை கொண்டு வர வேண்டியதில்லை, சகலமும் தானாகவே நடந்தேறும் ......................
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
08-பிப்-201313:54:02 IST Report Abuse
saravanan அடடா.... டாஸ்மாக் கஸ்டமர் ரெண்டு பேர் ஜெயிலுக்கு போயிட்டாங்களே..... அந்த ஏரியாவுல டார்கெட் கொஞ்சம் அதிகமா வைக்க சொல்லணும்.....
Rate this:
Share this comment
Cancel
MSG - Kanagawa,ஜப்பான்
08-பிப்-201313:28:08 IST Report Abuse
MSG எங்க போயிருக்கும் இந்த பெரிசு? எதாவது டாஸ்மாக்கு கடைல குடிச்சிட்டு குப்புற அடிச்சி படுத்துக் கெடக்கும். போய் பிடிங்க போலீஸ்கார். களிய தின்னுப்புட்டு கம்பி எண்ணட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ragavi As - madurai vandiyur,இந்தியா
08-பிப்-201313:21:26 IST Report Abuse
Ragavi As குடி பழக்கம் உள்ள குடிகாரர்களே நன்றாக குடியுங்கள்.ஆனால் உங்களை நம்பி வந்த உங்கள் அருமை மனைவியை தயவு செய்து கொல்லாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-பிப்-201313:20:18 IST Report Abuse
Pugazh V மது விற்பனை சசிகலாவின் அவசியம். அவரது ஆலைகளிலிருந்து தான் எல்லா டாஸ்மாக்கிர்க்கும் மது விநியோகம். யார் எப்படிப் போனால் என்ன, மது விற்பனை அமோகமாக வேண்டும். விற்பனை குறைந்தால் வேலை நீக்கம், ஜாக்கிரதை. உடனே, தொடங்கியதே கலைஞர் தானே என்று ஆரம்பிக்காதீர்கள். தொடங்கிய போது இவ்வளவு குடிகாரர்கள் இல்லை. அப்படியே அவர் துவங்கியது என்றாலும் ஏன் பிறர் நிறுத்த வில்லையாம்? தொடர வேண்டிய அவசியம் என்னவாம்?
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
08-பிப்-201313:17:13 IST Report Abuse
PRAKASH எவன் செத்தா எங்களுக்கு என்ன .. நாங்க எங்க இலக்கை (வசூலில்) அடைவதே எங்களுக்கு முக்கியம் .. இந்த பாவம் நிச்சயம் இந்த அரசை சும்மா விடாது
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
08-பிப்-201312:41:19 IST Report Abuse
Rajasekaran Palaniswamy இரு கழகங்களும் ஒரு தலைமுறையையே அழித்துவிட்டது. இந்த சாராய விற்பனையை நிறுத்தும் காலம் என்று வருமோ அன்றுதான் தமிழகத்திற்கு பொற்காலம். இன்று நடக்கும் அனைத்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி இவைகளுக்கு மதுவே காரணம். இது தமிழக அரசு பொதுமக்களுக்கு கொடுக்கும் இலவச விஷம். வைகுண்டம், சிவலோகம் செல்ல இலவச அனுமதி சீட்டு.
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
08-பிப்-201312:18:58 IST Report Abuse
BLACK CAT இளமை முதலே, எந்த வேலைக்கும் செல்லாமல், ஊர் சுற்றிய அர்ச்சுனன், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்...... இவரின் கடின உழைப்பால் இவர்களுக்கு, 6 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இது போதாத இவர் ஒரு கடின உழைப்பாளி என்பதற்க்கு சான்து...?
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
08-பிப்-201312:18:15 IST Report Abuse
chinnamanibalan ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள இலவசங்களை அளிக்க வேண்டிய நிலையில் ஆட்சியாளர்கள் உள்ளனர் .எனவே அதிக வருமானத்தை அளிக்கும் டாஸ்மாக்கில் அரசு அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் குடியால் தாலி அறுப்புகள் ,தலை அறுப்புகள் போன்ற கொடூரங்கள் சமூகத்தில் நிகழும் அவலத்தை பற்றி அரசு சிந்திப்பதே இல்லை.மக்கள் நல அரசுக்கு ,குடி போன்ற சமூகத்தீமையை களைவதன் மூலம் வருவாய் இழப்பு ஏற்படினும் அதனை பொருட்படுத்தாது, சமூக நலன் கருதி துணிச்சலான நடவடிக்கையை எடுக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை