அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், கிண்டலும், எதிர்ப்பும் தெரிவிப்பதால், இன்று, சட்டசபை விவாதத்தில் பங்கேற்று பேசுவதை தவிர்க்க, விஜயகாந்த் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு, பிப்., 1ம்தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான, விவாதத்தில் பங்கெடுத்து பேசியபோது, முதல்வர் ஜெ.,- எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் இடை@ய, கூட்டணி தொடர்பாக நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது. "சஸ்பெண்ட்' : அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள், விஜயகாந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபையில் அநாகரிக மாக நடந்துக்கொண்டதாக , 10 நாட்களுக்கு விஜயகாந்த்,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்த விஜயகாந்த், தீர்ப்பு வரும் வரை, சட்டசபைக்கு செல்வதை தவிர்த்துவந்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கடந்தாண்டு, ஏப்., மாதம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்பிறகு, சட்டசபைக்கு சென்று, கையெழுத்து போடுவதோடு, சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதை விஜயகாந்த் தவிர்த்து வருகிறார்.
கடந்தாண்டு ஜனாதிபதி தலைமையில் நடந்த, சட்டசபை வைர விழா மற்றும் இந்த ஆண்டு கவர்னர் உரையிலும், விஜயகாந்த் பங்கேற்றார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம், இன்றுடன் முடிகிறது.கடந்த மூன்று நாட்களாக, தே.மு.தி.க.,-எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேரை தேர்வு செய்து, சபை விவாதத்தில், விஜயகாந்த் பங்கேற்க செய்தார். இன்று முதல்வரின் பதிலுரைக்கு முன், எதிர்கட்சி தலைவருக்கு,விவாதத்தில் பங்கேற்று பேச, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குட்டிக் கதைகள் :
சமீபகாலமாக அமைச்சர்களும், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்களும், தி.மு.க., தலைவர்களை காட்டிலும், விஜயகாந்தை அதிகம் விமர்சித்து வருகின்றனர். சட்டசபையில், குட்டி கதைகளுடன், விஜயகாந்தை கிண்டல் செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.இதனால், முக்கியமான பிரச்னை குறித்து பேசினால் கூட, அமைச்சர்கள், அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.,க்களும் குறுக்கிட்டு கிண்டலும், எதிர்ப்பும் தெரிவிக்கவாய்ப்புள்ளது என, விஜயகாந்த் கருதுகிறார்.
எனவே, இன்றைய விவாதத்தில் பங்கேற்பதை தவிர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்திற்கு பதிலாக, எதிர்கட்சி துணைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசவுள்ளதாக தெரிகிறது.இதனிடையே, சட்டசபை விவாதத்தில் விஜயகாந்த் பங்கேற்று பேசவேண்டும் என, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று நேரில் வலியுறுத்தினர். அதற்கு, பதில் சொல்லாமல் விஜயகாந்த், புன்னகைத்தபடியே சென்றுள்ளார்.
பதிலுக்கு பதில் : இதுகுறித்து, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கூறியதாவது: எங்கள் தலைவர் பேசும்போது, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தால், பதிலுக்கு நாங்களும் அதை செய்தால், நன்றாக இருக்காது. சபையை சுமூகமாக நடத்தவேண்டும் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பல்வேறு பிரச்னைகள் இருக்கும் இந்த நேரத்தில், எதிர்கட்சி தலைவர் பேசினால் நன்றாக இருக்கும் என, கூறியுள்ளோம். எங்கள் கோரிக்கையை விஜயகாந்த் நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என, நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விஜயகாந்த் அண்ணாதிமுகவிற்கு பயந்துகொண்டு சட்ட சபைக்கு செல்லமால் இருக்க கூடாது. சட்ட சபையில் நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு சபை நிகழ்ச்சிகளை புறக்கணித்தால் உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாகி விடும். ஆளுநர் உரையில் விடுபட்டுப்போன முக்கியமான் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு பேச இந்த சந்தர்பத்தை பயன் படுத்த வேண்டும். உங்களை கிண்டல் செய்து உசுப்பேத்தினாலும் அதை எவ்வாறு சமாளிக்கின்றீர்கள் என்று காட்ட வேண்டிய சமயமும் ஆகும்.
விஜயகாந்த் அவர்கள் நிச்சயம் பேச வேண்டும். ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல் லூசு தனமாக உங்களின் கலரை பற்றியோ அல்லது குடிகாரன் என்றோ அல்லது நிதானம் இல்லாதவர் என்றோ அல்லது எந்நேரமும் தண்ணீரில் கிடப்பவர் என்றோ விமர்சிப்பார்கள்... ஏனென்றால் அவர்களுக்கு ஆட்சி செய்வது என்றால் என்ன என்று தெரியாது. ஆச்சிக்கு எப்படி துதி பாடுவது, காலில் விழுந்து காலை கழுவி விடுவது மட்டும் தான் தெரியும்...நீங்கள் அதை பொருட்படுத்தாது பேச வேண்டியதை மட்டும் பேசிவிட்டு வந்துவிட வேண்டியது தான்...
எந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினாலும் - ஆளும் கட்சிக்காரர்கள் சொல்வது இதுதான் - "உங்கள் கட்சித்தலைவருக்கு இதை சொல்ல அறுகதை இல்லை.. அம்மா ஆட்சியில் எல்லாம் முன்னேற்றமே" என்று.
மக்கள் ஒருவருக்கு அருகதை உண்டு என்று தீர்ப்பளித்தபின் இவர்கள் அதனை உதாசீனம் செய்வது ஜனநாயகத்தை அழிக்கும் செயல். அதனை முதல்வரும் ரசிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.