சேலம்: எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பதிவாளர் பணியிடம், ஏழு ஆண்டாக நிரப்பப்படாததால், பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறியதாவது: தமிழக, எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கட்டுப்பாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், நர்ஸிங் கல்லூரிகள், பல் மருத்துவக்கல்லூரிகள், பேரா மெடிக்கல் கல்லூரிகள் என, 120 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்த கல்லூரிகளை திறம்பட நிர்வகிக்க, மருத்துவ பல்கலையில் துணை வேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர் பணியிடம் பிரதானமானது. ஆனால், ஏழு ஆண்டாக பதிவாளர் பணியிடம் நிரப்பப்படாமல், காலியாகவே இருந்து வருகிறது. பதிவாளருக்கு பதிலாக, பொறுப்பு
அதிகாரியை நியமனம் செய்து, நிர்வகிப்பதால், நிர்வாகத்தில் பல்வேறு குழப்பங்கள், முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளது. துணை வேந்தரை விட, நிர்வாகத்தில், கூடுதல் கவனம் செலுத்திய வேண்டிய பொறுப்பும், கடமையும்பதிவாளருக்கு உண்டு.
அவருக்கு ஈடாக, அரசு துணை செயலர் அல்லது பேராசிரியராக ஐந்தாண்டு பணி நிறைவு செய்தவர்களை, பதிவாளர் பணியில் அமர்த்தலாம். ஆனால், ஐந்தாண்டு நிறைவு செய்து, சர்வீஸில் உள்ள பேராசிரியர் கிடைப்பது அரிதான ஒன்று. எனவே, ஏழு ஆண்டாக பதிவாளர் நிரப்பப்படாத காரணத்தால், கடந்தாண்டு தேர்வு நடத்தி அதை ரத்து செய்தது, அதற்காக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது. எம்.சி.ஐ., விதிப்படி, மாணவர்கள் வருகை, 80 சதவீதமாக இருந்தும், அதை, தன்னிச்சையாக, 90 சதவீதமாக உயர்த்தியது போன்ற பல்வேறு குளறுபடிகள், நிர்வாகத்தில் ஏற்பட்டு,
Advertisement
முறைகேடுக்கு வித்திட்டுள்ளது.
அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது, திறனற்ற நிர்வாகத்தையே காட்டுகின்றன. எனவே, விதிமுறையை தளர்த்தி, அரசு துணை செயலருக்கு ஈடாக, துணை பேராசிரியர் அல்லது பேராசிரியர் ஒருவரை பதிவாளராக நியமிக்க தமிழக அரசு முன்வரவேண்டும். இல்லாத பட்சத்தில், பல்கலை நிர்வாகம் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.