புதுடில்லி
: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், வரும் மார்ச் முதல்
தேதியிலிருந்து, புதிதாக சேருபவர்களுக்கு, ஆதார் அடையாள அட்டை கட்டாயம்
என்ற உத்தரவை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு,
இருப்பிட சான்று, பாஸ்போர்ட் வாங்குவது, அரசின் நலத்திட்ட உதவிகள், வங்கி
கணக்கு துவக்க பயன்படும் வகையில், ஒருங்கிணைந்த அடையாள எண் என்ற, "ஆதார்'
அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த அட்டை வழங்கப்பட்ட பிறகு,
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், இதுதான் அடையாள அட்டையாக எடுத்து
கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட
அலுவலகம் கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. "வரும் மார்ச்
முதல் தேதியிலிருந்து, வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் புதிதாக கணக்கு
துவக்குவதற்கு, ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுகிறது' என்று
குறிப்பிட்டு இருந்தது. வருங்கால வைப்பு நிதி திட்ட அலுவலகம் வெளியிட்ட
இந்த அறிவிப்புக்கு, தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. "திட்டமே
பெரும்பாலான மாநிலங்களில் அமலுக்கு வராதபோது, எப்படி சாத்தியமாகும்' என்று
கேள்வி எழுப்பி இருந்தன. ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்புடன் ஆலோசனை
நடத்தப்பட்டது. இதில், வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர்களுக்கு
மார்ச் முதல் தேதிக்குள் ஆதார் அட்டை வழங்குவது சாத்தியமில்லை என
தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, "புது கணக்கு துவக்குவதற்கு ஆதார்
கட்டாயம்' என்ற உத்தரவை நிறுத்திவைக்க, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
திட்ட அலுவலகம் முடிவு செய்தது. இதற்கான, உத்தரவு டில்லியில் உள்ள தலைமை
அலுவலகத்திலிருந்து மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பபட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.