லக்னோ : உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சரவை, நேற்று முதன் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஒரு கேபினட் அமைச்சர் உட்பட, மொத்தம், 12 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர். உ.பி.,யில், கடந்தாண்டு மார்ச் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. கட்சியின் தலைவரான, முலாயம் சிங்கின் மகன், அகிலேஷ் யாதவ் முதல்வர் பதவி ஏற்றார். அவருடன், 48 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர். பின், விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த, கமலேஷ்வர் காலமானார். கோன்டா மாவட்ட மருத்துவ அதிகாரியை தாக்கியதாக, வருவாய் துறை அமைச்சராக இருந்த, வினோத் குமார் சிங், கடந்த அக்டோபரில், பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், 10 மாதம் கழித்து, முதல் முறையாக, உ.பி., அமைச்சரவை நேற்று, விரிவாக்கம் செய்யப்பட்டது. லக்னோவில் நேற்று, கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், ஒரு கேபினட் அமைச்சர் உட்பட, 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், மருத்துவ அதிகாரியை தாக்கியதாக, பதவி நீக்கம் செய்யப்பட்ட, வினோத் குமார் சிங், மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். இவருடன், சமாஜ்வாதி கட்சியின் பொது செயலர், நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் அகர்வால், அமேதியில் காங்., வேட்பாளர் அமிதா சிங்கை தோற்கடித்த, காயத்ரி பிரசாத் ஆகியோரும், அமைச்சர்களாகி உள்ளனர். முதல்வர் அகிலேஷை தவிர்த்து, 19 கேபினட் அமைச்சர்கள், ஐந்து, தனிபொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 33 இணை அமைச்சர்கள் என, உ.பி., அமைச்சரவையின் எண்ணிக்கை, 58 ஆகி உள்ளது. இந்தியாவிலேயே, அதிக சட்டசபை உறுப்பினர்களை கொண்ட, உ.பி.,யில் அமைச்சர்கள் எண்ணிக்கையை, 60 வரை வைத்து கொள்வதற்கு, சட்டத்தில் வழியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.