கொச்சி
: கேரளாவில், அமாவாசை நாட்களில், இரவு நேரத்தில் போலீஸ் ரோந்து செல்வதும்,
பிற நாட்களில் இரவு நேர ரோந்தை குறைத்து கொள்வதும் இப்போதும் நடைமுறையில்
உள்ளது. அமாவாசைக்கு முந்தைய, இரண்டு நாட்களும், பிந்தைய, இரண்டு
நாட்களும், இரவில் இருள் அதிகமாக இருக்கும். அந்த நாட்களில், திருடர்கள்
கைவரிசை காட்டுவர் என்பதால், அதை தடுக்கும் வகையில், போலீஸ் ரோந்து சற்று
அதிகமாக இருக்கும். இந்த தகவல் தொழில்நுட்ப காலத்திலும், கேரள போலீஸ்,
இம்முறையை கைவிடாமல் பின்பற்றி வருவது தான் வினோதமாக உள்ளது. அமாவாசை
நாட்களில் கட்டாயம் இரவு ரோந்து செல்ல வேண்டும் எனவும், பிற நாட்களில்,
தேவைப்பட்டால், இரவு நேர ரோந்தை குறைத்து கொள்ளலாம் எனவும், போலீசாருக்கு,
உயரதிகாரிகள் கட்டளை இடுவது இப்போதும் வழக்கமாக உள்ளது. இதுபற்றி, கொச்சி
நகர போலீஸ் கமிஷனர், கோபாலகிருஷ்ண பிள்ளை கூறும் போது, ""நீண்ட காலமாக இந்த
முறை வழக்கத்தில் உள்ளது. அதை மாற்ற யாரும் முன்வரவில்லை. எனவே,
இன்னமும்
தொடர்கிறது,'' என்றார். இருட்டில் தான் திருட்டு என்பதெல்லாம் பழம் கதை;
பட்டப் பகலிலேயே திருடும் கும்பல்கள், தங்கள் கைவரிசையை பரவலாக காட்டி
வரும் இந்த நாளில், இன்னும் அமாவாசை ரோந்து முறையை கேரள போலீஸ் பின்பற்றி
வருவது வினோதமாக தான் இருக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.