பெங்களூர
: ""சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின் போது, காயம்
பட்ட மாநில போலீஸ்காரரை தவிக்க விட்டு செல்லவில்லை. அவரின்
பாதுகாப்பிற்காகவே, சிறிது நேரம் விட்டு சென்றோம்,'' என, விமானப்படை தளபதி,
பிரவுனி தெரிவித்துள்ளார்.ஜனவரி மாதம், சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல்
ஒழிப்பு நடவடிக்கையில், விமானப்படையினர் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு,
மாநில போலீசார் சிலரும் உதவி செய்தனர். நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த
இடத்தில், தாக்குதலின் போது, காயமடைந்த மாநில போலீஸ்காரர் ஒருவரை, விமான
படையினர், அப்படியே தவிக்க விட்டு சென்றனர் என்ற புகார் எழுந்தது. மத்திய
உள்துறை செயலர், ராணுவ செயலருக்கு அனுப்பிய கடிதம், வெளியே கசிந்ததால்,
இந்த விவகாரம் தெரிய வந்தது. "போலீஸ்காரரை தவிக்க விட்டு சென்ற,
விமானப்படை வீரர்கள் செயல் தவறு' என, பலதரப்பிலும் பேசப்பட்டது.
இது
குறித்து, பெங்களூரு, விமான கண்காட்சியில் பங்கேற்றுள்ள, விமானப்படை தளபதி,
ஏர் சீப் மார்ஷல், பிரவுனியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:
தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையின் போது பின்பற்றப்படும் நடைமுறை தான்
அது. நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த இடத்தில், அவர்களுடன் சண்டையிடும் போது,
காயம்பட்ட போலீஸ்காரரை, உடனடியாக பாதுகாப்பாக அப்புறப்படுத்த
முடியவில்லை. அதனால் தான் அவரை விட்டு சென்றோம். அவர் மட்டுமல்ல;
விமானப்படை ஹெலிகாப்டரையும் விட்டு சென்றோம். ஏனெனில், ஹெலிகாப்டரில் அவரை
ஏற்றி சென்றால், அதை நக்சல்கள் சுட்டு வீழ்த்த வாய்ப்பு இருந்ததால்,
வீரர்கள் ஒவ்வொருவராக பிரிந்து சென்றனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு
செய்யப்பட்ட பிறகு, காயம்பட்ட போலீஸ்காரரை, நாங்கள் தான் அந்த
இடத்திலிருந்து அப்புறப்படுத்தினோம். அவரை மோட்டார் பைக்கில் அழைத்து
சென்றதாக கூறப்படுவது தவறு; அவரை, கவச வாகனத்தில் அழைத்து சென்றோம்.
இவ்வாறு, பிரவுனி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.