சென்னை : ""தருமபுரி கலவரம்சம்பவம் நடந்தபோது, 5 மணி நேரத்திற்குப் பிறகே, போலிசார் சென்றனர். அனைத்து தளவாட வசதிகளும் அளித்துள்ள நிலையில், போலீசார், உடனடியாக செல்லாதது ஏன்?'' என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார். கவர்னர் உரை மீது, சட்ட சபை கட்சித் தலைவர்கள் நேற்று பேசினர். சட்டசபை மார்க்சிஸ்ட் தலைவர் சவுந்தரராஜன் பேசியதாவது:வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் அறிவிப்பதில், மர்மம் தேவையில்லை. உடனடியாக, நிவாரண அறிவிப்பை வெளியிட வேண்டும். சட்டம்-ஒழுங்கு நிலை சிறப்பாக உள்ளது என, கவர்னர் உரையில் தெரிவித் திருந்தாலும், கொலை, கொள்ளைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொடர்ந்து கொலை செய்யப்படுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம்-நிதி அமைச்சர்: முந்தைய, தி.மு.க., ஆட்சியில், கொலை குற்றங்களின் அளவு, 5.1 சதவீதம்; தற்போது, 3.37 சதவீதமாக குறைந்துள்ளது. குற்றங்கள், தொடர்ந்த நடக்க வில்லை. சவுந்தரராஜன்: தருமபுரி கலவரம் சம்பவம் நடந்தபோது, போலீசார், அங்கு உடனடியாக செல்லவில்லை. சென்னையில் குற்றங்கள் நடந்தால், 8 நிமிடங்களில், போலீசார் சென்று விடுகின்றனர். பிற இடங்களாக இருந்தால், அரை மணி நேரத்தில் செல்கின்றனர். போலீசாருக்கு, அனைத்து தளவாட வசதிகளும் வழங்கியுள்ள நிலையில், தருமபுரியில் நடந்த கலவர இடத்திற்கு, 5 மணி நேரத்திற்குப் பின் சென்றது ஏன்? போலீசாரின் செயல்பாடு, கண்டிக்கதக்கது. இந்த வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும். நிதி அமைச்சர்: போலீசார், சிறப்பாக செயல்படுகின்றனர். தருமபுரி சம்பவ இடத்திற்கு, போலீசார் விரைந்து சென்றனர். விசாரணை, முறையாக நடந்து வருகிறது. சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க தேவையில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.