தமிழகத்தில்,
தொகுதி மறுசீரமைப்புக்கு பின், எம்.எல்.ஏ., அலுவலகம் இல்லாத தொகுதிகளில்
கட்டப்பட்ட, 28 அலுவலகங்கள் ஏப்ரலில் திறக்கப்படுகின்றன. இவற்றில்,
ஆளுங்கட்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்,
சட்டமன்ற, லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பின் காரணமாக, தொகுதிகளின்
எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன. அவ்வாறு, மாற்றி அமைக்கப்பட்ட சில
தொகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ., அலுவலகங்கள் அமைந்து
விட்டன. மேலும், சில தொகுதிகளில், எம்.எல்.ஏ., அலுவலகமே இல்லாத சூழ்நிலை
ஏற்பட்டது. இதுபோன்று, 39 தொகுதிகளுக்கு, எம்.எல்.ஏ., அலுவலகம் இல்லாமல்
இருந்தது.
அத்தொகுதி எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த
ஆண்டு,எம்.எல்.ஏ., அலுவலகம் இல்லாத தொகுதிகளை கணக்கெடுத்து, முதலில், நிலம்
கையகப்படுத்தும் பணிகளில் பொதுப்பணித்துறை ஈடுபட்டது. பின், எம்.எல்.ஏ.,
அலுவலகம் இல்லாத, 39 தொகுதிகளில், 28 தொகுதிகளில் அலுவலகம் அமைக்க, ஒரு
எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு, 13.75 லட்சம் வீதம், 28 தொகுதிகளுக்கு, 3 .25
கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியது. தற்போது,
இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் மாதத்தில், ஆளுங்கட்சி
எம்.எல்.ஏ., அலுவலகங்களை, முதல்வர் திறக்க முடிவு செய்துள்ளதால்,
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதிகளில் நடந்து வரும் பணிகள், மிக விரைவாக
நடந்து வருகின்றன.
கட்சி தொகுதி எண்ணிக்கை
அ.தி.முக., 18
தி.மு.க., 1
தே.மு.தி.க., 4
ம.ம.கட்சி 1
சி.பி.ஐ., 3
சி.பி.எம்., 1
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.