""சர்க்கரை
நோயாளிகள், புழுங்கல் அரிசி சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு,
வேகமாக அதிகரிக்க வில்லை,'' என, அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.சட்டசபை
கேள்வி நேர விவாத விவரம்:கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்: பட்டை தீட்டப்பட்ட
அரிசியை சாப்பிடுவதால், சர்க்கரை, இதய நோய், புற்றுநோய்கள் உருவாக்கும்
அபாயம் உள்ளது. பட்டை தீட்டப்படாத அரிசி யின் பயன்பாடு குறித்து,
பள்ளி,கல்லூரி, மருத்துவமனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?அமைச்சர்
காமராஜ்: தமிழகத்தில் பெரும்பாலான மக்கள், புழுங்கல் அரிசியைத் தான்
சாப்பிடுகின்றனர். நெல்லை அறுவடை செய்து, காய வைத்து, இயந்திரங்களின் மூலம்
அப்படியே அரைத்து, அரிசியாக்கும் போது, நெல்லில் உள்ள உமியின் அடிப்பகுதி
புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் தவிட்டுடன் சேர்ந்து
வெளியில் சென்று விடுகின்றன. ஆகையால், பச்சரிசியில் பெரும்பாலான பகுதி மாவு
சத்தாகவே உள்ளது. அறிவியல் ரீதியாக, நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு பச்சரிசி
உகந்தது அல்ல. பச்சரிசியில் உள்ள, "ஸ்டார்ச்' என்ற மாவுச்சத்து, அரிசியை
உணவாக சமைத்து உண்கிற போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை துரிதமாக
உயர்த்துகிறது. புரதத் சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள்
குறைவான பச்சரிசியை, மக்கள் சாப்பிடும் நிலை உள்ளது. எனவே, பச்சரிசியைப்
பொறுத்த வரையில், பட்டை தீட்டினாலும், தீட்டாவிட்டாலும், அரிசியாக்கும்
போது, அதிலுள்ள சத்துக்கள் வெளியேறி விடுகின்றன. புழுங்கலரிசியைப் பொறுத்த
வரையில், நெல்லைத் தண்ணீரில் ஊற வைத்து, அவித்து, காய வைத்து,
இயந்திரங்களின் மூலம் அரைத்து அரிசியாக்கப்படுகிறது. அதிலுள்ள சத்துக்கள்
அரிசியின் உட்பகுதிக்குள் சென்று, அரிசியின் ஊட்டச் சத்தின் அளவை
அதிகரிக்கின்றன. குறிப்பாக, நீரழிவு நோய் உள்ளவர்கள் புழுங்கலரிசியை உணவாக
சமைத்து உண்ணும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்காமல்,
மெதுவாகவே உயருகிறது. இதனால், உடனடி பாதிப்பு, புழுங்கலரிசியை
உண்பவர்களுக்கு ஏற்படுவதில்லை; அனைத்து சத்துக்களும் முழுமையான அளவில்
கிடைக்கின்றன. புழுங்கலரிசியைப் பொறுத்த அளவில், நெல்லை அரைக்கிற போதே,
பட்டை தீட்டப்படுகிறது. புழுங்கலரிசியை பெரும்பாலான மக்கள் உண்பதால், பட்டை
தீட்டப்படாத அரிசியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு, நுகர்வோர்
பாதுகாப்பு இயக்கம் மூலம் ஏற்படுத்தப்படும். கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,
தொடர்ந்து, பட்டை தீட்டப்பட்ட அரிசியால் ஏற்படும் விளைவுகளை பற்றியும்,
கைக்குத்தல் அரிசியின் பயன்களை பற்றியும் பேசினார். அப்போது சபாநாயகர்
தனபால், " கேள்வி மட்டும் கேளுங்கள். நீங்கள் நல்ல டாக்டர் என்று
எங்களுக்கு தெரியும்' எனக் கூறியதும் சபையில் சிரிப்பலை எழுந்தது. இவ்வாறு
விவாதம் நடந்தது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.