சென்னை : ""குறைந்த மின் அழுத்தம் வரும் டிரான்ஸ்பார்மர்களில், "கெப்பாசிட்டர்' பயன்படுத்தி, மும்முனை மின்சாரத்தை உறிஞ்சி எடுக்க வேண்டாம்,'' என, விவசாயிகளுக்கு, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்தார். சட்டசபையில், நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், மின் உபகரணங்கள் மற்றும் புதிய டிரான்ஸ்பார்மர் களை அமைப்பது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அதற்கு, மின்சாரத் துறை அமைச்சர் விஸ்வநாதன் அளித்த பதில்: டிரான்ஸ்பார்மர்களின் ஆயுட் காலம், அந்தந்த பகுதி மக்கள் பயன்படுத்தும், மின்சாரத்தை பொறுத்து தான் அமைகிறது. குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வரும் போது, சில விவசாயிகள், கெப்பாசிட்டர் பயன்படுத்தி மும்முனை மின்சாரத்தை உறிஞ்சி எடுக்கின்றனர். குறைந்த மின் அழுத்தம் வரும்போது, அதிகப்படியான மின்சாரத்தை எடுக்க வேண்டாம்; இதனால், ஒட்டு மொத்த டிரான்ஸ்பார்மர்களும் பாதிக்கப்படும். மேலூர் தொகுதியை, முன் மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும் என, எம்.எல்.ஏ., சாமி விருப்பம் தெரிவித்தார். அந்த தொகுதி மட்டுமல்ல, அனைத்து தொகுதிகளும், மாதிரி தொகுதிகளாக உருவாக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பழுதடையும் டிரான்ஸ்பார்மர்களை உடனுக்குடன் சரி செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.