சென்னை : ""அரிசி உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள விலையை விட, கூடுதலாக அரிசி விலை வைத்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சட்டசபையில் தெரிவித்தார். சட்டசபையில் நடந்த விவாதம்: பா.ம.க., - கணேஷ்குமார்: தமிழகத்தில் அரிசி விலை, அத்தியாவசிய பொருட்களின் விலைகடுமையாக உயர்ந்துவருகிறது.உணவுத்துறை அமைச்சர் காமராஜ்: தமிழகத்தில் அரிசி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக கூறுவது தவறு. தமிழகத்தில் தான் விலையில்லா அரிசி, ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படுகிறது. நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர், விளம்பரம் ஒன்றை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளனர். அதன் படி, ஐ.ஆர்., 20 அரிசி, 24 லிருந்து, 26 ரூபாய் வரையும், பொன்னி அரிசி, 32 லிருந்து, 34 ரூபாய் வரையும், இட்லி அரிசி, 26 முதல், 28 ரூபாய் வரையும் விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விலைக்கு மேல், வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாலபாரதி - மார்க்சிஸ்ட்: அரிசி விலை, 40 ரூபாயை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.இ.கம்யூ., - குணசேகரன்: குறைந்த விலை அரிசி எங்கு விற்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். அமைச்சர் காமராஜ்: விலை அதிகமாக உள்ளது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. அதன் பின், நெல், அரிசி மொத்த விற்பனையாளர்கள் இப்படி அறிவித்துள்ளனர். இதற்கு மேல் விலை வைத்து விற்றால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.