சென்னை : ""கூட்டுறவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, அதிகாரிகள் அளவில், விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றபின், அவர், உரிய முடிவை எடுப்பார்,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார். கவர்னர் உரை மீதான விவாதத்தில், நேற்று, சட்டசபை கட்சித் தலைவர்கள் பேசினர். இதில், சட்டசபை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஆறுமுகம் பே”ம்போது, ""ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர்கள் பலர், ஓய்வூதியம் கேட்கின்றனர். இந்த கோரிக்கையை, அரசு பரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார். அமைச்சர் ராஜு: இந்த கோரிக்கை தொடர்பாக, அதிகாரிகள் அளவில், விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம், விரைவில், முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். முதல்வர், உரிய முடிவை அறிவிப்பார். ஆறுமுகம்: சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்கள் பயன்படுத்தும் டீசலுக்கு, வரி விலக்கு அளிக்க வேண்டும். விஸ்வநாதன் - மின்துறை அமைச்சர்: பர்னஸ் ஆயிலுக்கு, வரி விலக்கு தரப்படுகிறது. இதனால், அரசுக்கு, 96 கோடி ரூபாய், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இருந்தபோதும், வரிவிலக்கு சலுகை, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.